நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ரஜினி தனது மருமகளை கிண்டல் செய்த ஒருவரை கழுத்தினை அறுக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதில் அந்த நபர் ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை அணிந்திருப்பார். ஆர்.சி.பி அணியின் ஜெர்ஸி தவறான நபருக்கு அணிவிக்கப்பட்டது குறித்து ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடியது ஆர்.சி.பி விளம்பரக் குழு.
இதனை விசாரித்த தில்லி உயர்நீதி மன்றம், “ஆக.1இல் வெளியான ஜெயிலர் படத்தில் ஆர்.சி.பி அணியின் ஜெர்ஸி பயன்படுத்தப்பட்டுள்ளது. செப்.1ஆம் நாளுக்குள் இந்த காட்சியில் வரும் ஆர்.சி.பி ஜெர்ஸி நீக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டுமென படக்குழுவிற்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது. ஓடிடி, தொலைக்காட்சிகளிலும் மாற்றப்பட்ட காட்சிகளே ஒளிபரப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளது.