சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்ட காவல் ஆணையர், அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்படுகளை ஆய்வு செய்தார்.
 
அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு ஒரு மாத காலம் உள்ளதால் சுழற்சி முறையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
 
பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும். முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளோம். 3,000 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
 
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here