கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியீடு

டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து தகவல்களை பதிவுசெய்துள்ள ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் ரவிச்சந்திரன்

“டி.ஐ.ஜியின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன்”

“கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி மாத்திரை எடுத்துக்கொள்வார்”

“DSR பார்ப்பதற்காக 7ம் தேதி காலை 6.30 மணிக்கு டி.ஐ.ஜி வந்தார்”

“அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் குடிப்பதற்கு பால் கேட்டார்”

“காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார்”

“எனது துப்பாக்கியை கையில் எடுத்த டி.ஐ.ஜி. எப்படி பயன்படுத்துவது என கேட்டுக்கொண்டே வெளியில் சென்றார்”

“நான் வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது”

“தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்த நிலையில் டி.ஐ.ஜி கீழே விழுந்து கிடந்தார்”

“கோவை அரசு மருத்துவமனைக்கு டி.ஐ.ஜி-ஐ கொண்டு சென்றோம்”

டி.ஐ.ஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here