ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி 4 பேரும் சகோதர, சகோதரிகள். இதில் ஜெய்யை ஒரு தலையாக அமிர்தா காதலிக்கிறார். ஜெய்க்கோ பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடத்தை பார்க்கிறார், அந்த இடத்தின் உரிமையாளர் மகளை ஹோட்டல் கனவிற்காக ஓகே சொல்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் உள்ளார்.
அவர் அமெரிக்காவிலிருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா பிக்கப் செய்ய போக, இவர்களுக்குள் காதல் பற்றிவிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து ஜீவா பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார், அவர் தான் ரைஸா வில்சன்.
ஆனால், ரைஸாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த்..இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள்? யார் யாரை பிரிந்தார்கள்? என்பதே மீதிக்கதை.
பெரிய அளவில் பாடல்களும், இசையும் கவனம் பெறவில்லை. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் காட்சிகள் திரையை அழகாக்கியிருக்கின்றன. ஃபென்னி ஆலிவர் தேவையற்ற காட்சிகளில் மட்டும் சுந்தர்.சியின் பேச்சை மீறி கட் செய்திருக்கலாம். இது சுந்தர்.சி படமா? என்ற கேள்வியை எழுப்புகிறது….
இந்த காபியில் சர்க்கரை அளவு இல்லை……