மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த மைனர் சிறுவர்கள் இருவரும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376 (டி) மற்றும் போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சிறார்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2019ல் 47,335 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஆண்டில் பதிவான மொத்த குற்றங்களில் இந்த போக்சோ குற்றங்கள் மட்டும் 31.94 சதவிகிதமாகும். இது 2020ல் 36.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல 2021ல் 36.05 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இந்த குற்றங்களை களையெடுக்க வேண்டுமெனில் பெண்கள் குறித்த புரிதல்கள் அவசியம் என மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here