போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை.இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது படப்பிடிப்பு நடைப்பெற்றது.
இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடிக்கிறார், இவர் காலாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கிட்டத்திட்ட 2 ஆண்டுகள் ஆகியும் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் ‘வலிமை அப்டேட்’ கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று பார்க்கும் பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டனர்.கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் என்ற எழுதிய பதாகையுடன் அஜித்தின் தீவிர ரசிகர்கள் அமர்ந்திருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இன்று வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.அதை தொடர்ந்து #ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர்.தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு வலிமை மோஷன் வெளியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.