இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் முத்தமிழ் அறக்கட்டளை ,பல்வேறு பொதுநல நல சேவைகளை செய்து வருகிறது ,இதன் தொடர்ச்சியாக கிருஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர் ,விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முதுகுளத்தூர் கிழக்கு தெரு, கிருஸ்துவ பாதர் வழக்கறிஞர் அன்சாரி மற்றும் சமூக ஆர்வலர் வினோத்குமார் மற்றும் நிருபர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் வரவேற்பு உரை மற்றும் நன்றி உரையை முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் யேசுவின் வாழ்கை வரலாற்றை எடுத்து கூறினார் ,விழா முடிவில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.