வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், தியாகராய நகர், மாம்பலம், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், கோயம்பேடு, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறுகலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.