சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையில் ஏராளமான வசதிகளுடன் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே, மெரினா சர்வீஸ் சாலையில் சிறுவர் பூங்கா, கண்கவர் சிற்பங்கள் போன்றவை உள்ள நிலையில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை (wifi Internet) வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஐந்து இடங்களில் wifi hotspot நிறுவப்படவுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுத்த உள்ள இந்த இலவச இணைய சேவை திட்டம் ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.