சென்னை பழைய விமான நிலைய சரக்குப் பகுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்த பார்சலில் ஆயத்த ஆடைகள் மற்றும் புத்தகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் பார்சலை திறந்து சோதனையிட்டனர். அதில் துணிகளுக்கு அடியில் ஒரு சிறிய மரப்பெட்டியில் மெத் கிரிஸ்டல்ஸ் எனப்படும் உயர் ரக போதைப் பொருள் 920 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு 2 கோடியே 30 லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பார்சலின் அனுப்புனர் மற்றும் பெறுனர் முகவரிகள் போலி எனத் தெரிய வந்ததையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.