இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்த வித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது. மேற்படி இரண்டு நிகழ்வுகளிலும் சிறப்பாக பணியாற்றிய இராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை, M.A., அவர்கள் இராமநாதபுரம் உட்கோட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், மற்ற உட்கோட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வழங்கி பாராட்டினார்கள்.