சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பேருந்து நிலையத்தில் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்ற தகவலை பொதுமக்கள் கொரட்டூர் டி3 காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே டி3 காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உத்தரவின் பெயரில் உதவி ஆய்வாளர் பச்சமுத்து மற்றும் புகழேந்தி வல்லரசு காவல் உதவியுடன் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்த சடலத்தை மீட்டு யாரென்று விசாரணையை தொடங்கினர்.

இறந்தவர் பெயர் கண்ணன் வயது 45 இவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கொரட்டூர் பாலாஜி நகரில் வசித்து வந்ததாகவும் பின்னர் தனது வீட்டை விற்றுவிட்டு பட்டாபிராம் தண்டுரை பகுதியில் குடியேறி விட்டனர் என்ற தகவல் அறிந்த காவல்துறையினர் உறவினர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்து உடனடியாக உறவினரை வரவழைத்தனர் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர் திருமணம் ஆகாதவர் என்றும் தொடர்ந்து கொரட்டூர் பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வந்ததாகவும் சில மாதங்களாக இவர் எந்த ஒரு பணிக்கு செல்லாமல் கொரட்டூர் பேருந்து நிலையத்திலேயே இருந்து வந்த நிலையில் இங்கு இருக்கும் சிலர் இவருக்கு உதவி செய்து வந்ததாகவும் தெரிகிறது தற்போது இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென்று 4 மணி அளவில் இறந்துவிட்டார் என்று தகவல் காவல்துறைக்கு வந்தவுடன் காவல்துறையினர் வந்து சடலத்தை கைப்பற்றி அவர்கள் உறவினர்களை வரவழித்து சடலத்தை ஒப்படைத்தனர். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினரை பாராட்டினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here