சென்னை ஜாபர்கான் பேட்டை சேர்ந்த அருண் என்பவரின் மூன்று வயது குழந்தைக்கு உடல்நிலை பாதித்ததாக கூறி, நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் அதிகாலை 3 மணி அளவில் அனுமதித்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க முயன்ற போது, குழந்தை சரியாக ஒத்துழைக்கவில்லை எனக் கூறி 2 செவிலியர்கள் 3 வயது குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது.
திடீரென குழந்தை தொடர்ந்து அழுததை பார்த்த பெற்றோர், மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் லேசாக அடித்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் குழந்தையின் கன்னம் வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் மருத்துவமனைக்கு எதிராக குரல் எழுப்பியதால் அவர்கள் குழந்தையை வேறொரு மருத்துவமனைக்கு அனுமதித்து விட்டு நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மருத்துவமனை தரப்பிலிருந்து எந்தவித நிர்வாக விளக்கமும் தராததால் அவர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த குழந்தையை அடித்த மருத்துவமனை நிர்வாகம் வளாகம் மீதும் செவிலியர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமம் குழந்தைகள் நல வாரியம் இதில் தலையிட வேண்டும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் போன்ற செவிலியர்களால் சிறப்பாக பணியாற்றி வரும் செவிலியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சியை பரிசோதனை செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்…. மருத்துவமனை காட்டுமா? யார் யார் எல்லாம் குழந்தையை அடித்தார்கள் என்ற உண்மை வெளிவருமா? பார்ப்போம்.