உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 8 ஆவது ஆண்டு பாரதி உலா நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சாவித்திரி பவுண்டேஷன் நிறுவனர் கலைமாமணி ஜெ.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். 20 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பாரதி உலா நிகழ்ச்சிகளில் பாரதியின் சிந்தனைகளைப் பேசிய மாணவ மாணவிகளில் இருந்து ஆறு பேர் நட்சத்திர பேச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பேச்சரங்கம் நடைபெற்றது.
அந்த மாணவ மாணவிகளுக்கு நட்சத்திர பேச்சாளர் விருதினை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழங்கினார். பாரதியின் பாடல்களை புதிய மெட்டில் பாடும் இளம் பாடகர்கள் தேர்வில் வெற்றி பெற்ற 10 மாணவிகளின் பாரதியார் பாடலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இளம் பாடகர் விருதினை ஸ்ருதில யா இசை நடனப்பள்ளியின் முதல்வர் கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் வழங்கினார்.
பாரதி உலாவின் களப்பணியாளர்களை திரைப்பட இயக்குநர் எஸ் பி முத்துராமன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் ,முனைவர் தபம்ஸ் மேகநாதன் , நடிகர் டெக்னோ முரளி , திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் , கவி.முருகபாரதி சாயி சங்கரா மேட்ரிமோனியல் குழுமத்தின் நிறுவனர் முனைவர் பஞ்சாபகேசன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியினை சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் மற்றும் செயலாளர் உதயம் ராம் ஆகியோர் தொகுத்து வழங்கினர். அவை நிறைந்தது மக்களால் மனது நிறைந்தது மாணவ மாணவ களின் ஆற்றலால் பாரதி உலா நிறைவு பெற்றது…..