உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் புனித ஹஜ் செல்வது அதை இந்த பக்ரீத் பண்டிகையினையொட்டிதான் நிறைவேற்றப்படுகின்றது.
மேலும் தியாகத்தை உணர்த்தும் வகையிலும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் நோக்கத்திலும் இந்த பண்டிகையினை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இன்று துல் ஹஜ் பிறை புதுச்சேரியில் காணப்பட்டது. அதன் காரணமாக நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் பக்ரீத் வரும் ஜூன் 17ம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.