தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் விற்பனை நிலையம் கன்னியாகுமரி சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள் மற்றும் பூம்புகார் மாநில விருதுகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.04.2022 அன்று சென்னையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த கைவினைஞர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து,
பாராட்டுக்களை பகிர்ந்து கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிகொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டு தோறும் 15 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக இவ்வாண்டு 10 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் மொத்தம் 10 நபர்களுக்கு 8
கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகள் கன்னியாகுமரி மாவட்டம், சுவாமியார்மடம் பகுதியை சார்ந்த திருமதி வி. கமலம் (இயற்கை நார் பொருட்கள்), கொட்டாரம் பகுதியை சார்ந்த திரு.கே.வடிவேல் (கடல் சிப்பி பொருட்கள்), வடசேரி பகுதியை சார்ந்த திரு.முத்து சிவம் (கோயில் நகைகள்) ஆகிய 3 விருதாளர்களுக்கு ரூ.1 இலட்சம் ரொக்க பரிசும், 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், செம்பு பட்டயம் மற்றும் சான்றிதழை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.04.2022 அன்று வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும், “பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டு தோறும் 12 இலட்சம் ரூபாய் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் 50,000/- ரூபாய் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிழை கன்னியாகுமரி மாவட்டம் இரையூர் சார்ந்த மாற்றுத்திறனாளி செல்வி டி.செல்லம்மை (இயற்கை நார் பொருட்கள்) அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகள் பெற்ற 3 கைவினை நபர்களுக்கும், “பூம்புகார் மாநில விருது” பெற்ற ஒரு நபரையும் கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், பூம்புகார் விற்னை நிலைய மேலாளர் திரு.சே.இலட்சுமணன் உட்பட பலர் உள்ளார்கள்.