தூத்துக்குடி தாளமுத்துநகர் மேல அழகாபுரியை சேர்ந்த தனியார் மினிபஸ் ஓட்டுநரான சிவபெருமாள் மகன் வேல்முருகன் (23) என்பவர் நடத்துனரான தனது சகோதரர் ஐயப்பன் (19) என்பவருடன் நேற்று முன்தினம் மினிபஸ்ஸை ஓட்டிவந்து தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகிர்உசேன் நகர் பகுதியில் மினிபஸ்ஸை நிறுத்தி பயணியை இறக்கிவிட்ட போது அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ஜார்ஜ் (எ) ஜார்ஜ் ராஜா (28) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஓட்டுநர் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரர் நடத்துனர் ஐயப்பன் ஆகியோரிடம் தகராறு செய்து அவர்கள் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி வழக்கு பதிவு செய்து எதிரி ஜார்ஜ் (எ) ஜார்ஜ் ராஜாவை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.