கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (17.03.2023) எட்டையாபுரம் திப்பனூத்து காலனி தெருவை சேர்ந்த சண்முகராஜ் மகன் சுடலைமுத்து (42) என்பவர் மேற்படி முத்துக்குமாரின் மாட்டுப் பண்ணைக்கு சென்று அங்கு இரும்பு பைப் தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு முத்துக்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுடலைமுத்து முத்துக்குமாரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து சுடலைமுத்துவை கைது செய்தார்.