இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 21 வயது பெண் ஒருவர் கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள கடையில் வேலை பாா்த்து வந்தார். கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தனது காதலர் சரவணனுடன் கம்மியம்பேட்டை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வந்த 3 இளைஞர்கள் சரவணனை கட்டிப்போட்டு விட்டு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குப்பன்குளத்தைச் சோ்ந்த கிஷோா் (19), சதீஷ்குமாா் (19), புதுப்பாளையத்தைச் சோ்ந்த சையது ஆரிப் (19) ஆகியோரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவா்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியத்தின் உத்தரவின்பேரில், மூவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.