புதிதாக பறித்த பழங்களை விட, உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக அளவிலான தாதுச்சத்துக்களும், வைட்டமின்களும் இருக்கிறது. நாட்டு அத்தி, மற்றும் சீமை அத்திப்பழம் என இருவகை உண்டு. இதில் லேசான இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை இருக்கும். வாரத்தில் குறைந்தது 2-3 முறையாவது அத்திப்பழம் சாப்பிடுவதால், சிறுநீர்ப் பையில் கல், மூலநோய், வாய் துர்நாற்றம் போன்ற வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. 

இதில் அதிகப்படியான இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும். உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். உடல் எடை அதிகரிக்க விரும்புவோர், தினமும் 2 அத்திப்பழத்தை சாப்பிட்டால், இரத்த உற்பத்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வளர்ச்சியையும் தரும்.

இரத்த சோகை குணமாக (Anemia): இரவில் 3-5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் இப்பழத்தையும் சாப்பிட்டுவர, உடலில் புதிய இரத்தத்தை உற்பத்திசெய்து, இரத்த சோகையை முற்றிலும் குணமாகிவிடும். எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம் பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் வைட்டமின் கே இருப்பதால், எலும்புகளின் அடர்த்தி தன்மை அதிகமாக்கி, மூட்டு வலி, முதுகு வலி, என எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும்.

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் நார்சத்து (soluble fiber): அத்திப்பழத்தில் இனிப்பு தன்மை இருப்பதால், சர்க்கரை நோயாளிகள், காய்ந்த பழத்தை நேரடியாக சாப்பிடுவதை தவிர்த்து, பச்சையான அத்திக்காயை சமையலில் சேர்த்துக்கொண்டு, பொரியல் போன்ற உணவு வகையாக செய்து சாப்பிடலாம், இதில் உள்ள நார்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

இரத்த அழுத்தம் சீராகும் (Potassium): உடலில் சீரான இரத்த அழுத்தம் இருக்க தேவையான பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரித்து, இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2-3 பழங்கள் சாப்பிட்டுவரலாம். 2-3 பழங்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம், அல்லது காய்ந்த அத்திப்பழத்தை நேரடியாக சாப்பிடலாம்.

மலசிக்கல் பிரச்சனைக்கு தீர்வு (Constipation):

நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க கூடிய (soluble fiber) கரையக்கூடிய நார்ச்சத்து, குடலின் உட்பகுதியை நன்கு சுத்தமாகி, ஆசனவாய் வெடிப்பு, மற்றும் மூலவியாதி வராமல் தடுத்து, எந்த சிரமமும் இல்லாமல் எளிதில் மலத்தை வெளியேற்றிவிடும். தினமும் உணவிற்குப் பிறகு 5 பழங்களை இரவில் சாப்பிடவேண்டும். பெண்கள் தினசரி சாப்பிட்டுவர உடல் கவர்ச்சிகரமாக வளர்வதற்கு, தேவையான முழு அளவு ஊட்டச்சத்து இதில் இருக்கிறது. தினமும் ஒரு வேலை அத்திப்பழம் சாப்பிடுவதால் வெண்குஷ்டம், வெண்புள்ளிகள், தோலின் நிறமாற்றம் ஆகியவற்றை குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here