சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் அறிந்துகொள்ள உறவினர் கோவை சரளாவுடன் கிராமத்துக்கு வருகிறார் சுந்தர் சி. அந்த பங்களாவில் செட் பிராப்பர்ட்டியாக விடிவி கணேஷும், யோகி பாபுவும் இருக்கிறார்கள்.
அந்த அரண்மனையின் சொந்தக்காரர் டெல்லி கணேஷ். அவரின் பேத்தி ராஷி கண்ணா. அந்த அரண்மனையின் இன்னொரு செட் பிராப்பர்ட்டி சேசு. கேமியோ செட் பிராப்பர்ட்டியாக மொட்டை ராஜேந்திரன். இவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள். அந்த ஊரில் இருப்பது என்ன மாதிரியான பேய். அந்த பேயின் பூர்வீகம் என்ன? தங்கை, தங்கை கணவர் மரணத்துக்கு யார் காரணம்? ஏன் இந்தக் கொலைகள்? என்பதே மீதி கதை….
ஹன்சிகா, ஆண்டிரியா, லட்சுமி ராய், த்ரிஷா, ராஷி கண்ணா என சுந்தர் சியின் பேய் நாயகிகளில் தமன்னா புது வரவு. தமன்னா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை ஓகே. கிளைமேக்ஸ் சிம்ரன் குஷ்பு சாமி குத்து பாடல் அனைவரையும் பார்க்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் இல்லவே இல்லை. கோவை சரளாவை பேய் படத்தில் பார்த்து பார்த்து சலுத்துவிட்டதப்பா…. காமெடி எல்லாம் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. அரைத்த மாவையே அரைத்து வச்சது போல இந்த பேய் கதை இருக்கு. சுந்தர் சி அவர்களே பேய் கதையை இனிமேல் மாத்துங்க அய்யா முடியல…. என ரசிகர்கள் குமுறல், மீண்டும் உங்கள் கதையில் காமெடிக்கு முக்கியத்தும் கொடுங்கள்.
அரண்மனை 4 – பேய் அடி