கரூர்:

பா.ஜ.க. மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, அப்பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த தொட்டம்பட்டி கிராமத்திற்கு வந்தார்.

அவருக்கு கரூர் மாவட்ட எல்லையான வைரமடையில் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்:

கரூர் பா.ஜ.க. சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் அதிகமானோரை பா.ஜ.க.வில் இணைத்து வருகின்றனர்.

பா.ஜ.க. வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாத வளர்ச்சியாக போய் கொண்டிருக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் அது தெரியும். கரூர் மாவட்டத்தில் நிச்சயமாக 2, 3 தொகுதிகளை ஜெயிக்க சந்தர்ப்பம் இருக்கிறது.

இங்கு இருக்கின்ற எழுச்சியை அப்படியே தேர்தல் களத்தில் இறக்கினால் போதும், பொறுப்பாளர்கள் வேலை செய்தால் போதும். பிரதமர் செய்யக்கூடிய திட்டங்கள் கடை கோடி தமிழர்களுக்கும் தெரிய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here