நடிகர் சத்யராஜ், ஸ்ரீபதி, நியா, மகேஷ், அப்புகுட்டி, உள்ளோட்டோர் நடிப்பில் ஜூலியன் மற்றும் ஜெரோமோ இன்டர்நேஷனல் தயாரிப்பில் மோகன் டச்சு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் “அங்காரகன்”
மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது. அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.
அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது.
சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை…..
அங்காரகன் என்றவுடன் செவ்வாய் பகவான் என தற்போதைய ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் படத்தில் அங்காரகன் என்றால் ஆங்கிலேயரை எதிர்த்த மலைவாழ் மக்களில் ஒருவன் என இயக்குநர் குறிப்பிடுகிறார். இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் எதிர்பாராத திருப்பம் ஒன்றை இயக்குநர் கையாண்டிருக்கிறார். அது சிலருக்கு பிடித்திருக்கிறது.
சத்யராஜ் நடிப்பு பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்துக்காக முழு மொட்டையுடன் தோன்றியிருக்கிறார். ரிசார்ட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவரது பாணியிலேயே விசாரிப்பது லந்து.
கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்……
மொத்தத்தில் இந்த “அங்காரகன்” பலிக்கு பலி……