குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென பிரத்யேக தளமான ஆண்ட்ராய்டு கோ எடிஷன் உருவாகி வருகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷன் 2018 ஆம் ஆண்டு முதல் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புதிய கோ எடிஷன் அதிவேக செயல்பாடு, மேம்பட்ட பெர்மிஷன்கள், ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 தளத்தில் இருக்கும் மூன்று அம்சங்கள் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது. இவை கான்வெர்சேஷன்களுக்கு தனி பகுதி, செயலிகளுக்கு மேம்பட்ட பெர்மிஷன் கண்ட்ரோல் மற்றும் சிஸ்டம் வைடு ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் ஆகும்.
கோ எடிஷனில் உள்ள பெர்மிஷன்கள் ஆண்ட்ராய்டு 11 தளத்தில் உள்ளதை போன்றே இயங்குகிறது. பயனர்கள் ஒருமுறை பெர்மிஷன்களை வழங்கினால் அவை அந்த செயிலியில் ஆட்டோ-ரீசெட் செய்யப்பட்டுவிடும். அடுத்த முறை இதே பெர்மிஷன் தானாக செயல்படுத்தப்பட்டு விடும்.
இத்துடன் ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் சிஸ்டம் வசதியும் கோ எடிஷனில் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் ஹோம் ஸ்கிரீன், பின்புறமாக நேவிகேட் செய்தால் செயலிகளுக்கிடையே ஸ்விட்ச் செய்ய முடியும்.
இதேபோன்று கூகுள் ஃபைல்ஸ் சேவையில் புதிதாக சேஃப் ஃபோல்டர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு தனிப்பட்ட தரவுளை 4 இலக்க பின்-என்க்ரிப்ட்டெட் ஃபோல்டரில் வைத்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அதிகபட்சம் 2 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கொண்டு செயலிகளை 20 சதவீதம் வேகமாக லான்ச் செய்ய முடியும். ரேம் வசதி நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சம் மூன்றில் இருந்து நான்கு செயலிகளை பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.