இயக்குனர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம். சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை மையமாகக்கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகன் பலூன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பலூன் பிக்சர்ஸ் T.N அருண்பாலாஜி இணைந்து தயாரிக்கிறார்கள்.
விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது. அந்த வகையில் முழுக்க நகைச்சுவையையும், உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது.