twitter-dmk-ammk-n.ravi

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் நா.ரவி  வாழ்த்து தெரிவித்துள்ளார். நா.ரவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ வரலாற்று சிறப்புமிகு திராவிட இயக்க வெற்றிப்பாதையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் புதிய வரலாறு படைக்க அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here