வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதியாக சென்ற பேரணி, நீதிமன்ற வீதியில் சென்றபோது, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சட்டவிரோதமாக கூடுவதை தவிர்த்துவிட்டு அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசத் தொடங்கினர். இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சனிக்கிழமை இரவும் போராட்டம் நீடித்தது.
புரூடியை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற வீடியோ பதிவுகளை அவரது குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட, அது போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாற்றியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த  வார இறுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் போது , நிறவெறி மற்றும் போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வலுக்கத் தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here