தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாவட்ட அவைத் தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்ஷா முன்னிலையில் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக அதிமுகவினர் காந்தி சிலையிலிருந்து அமைதி பேரணியாக மதுரை ரோடு வழியாக அண்ணா சிலை வந்தடைந்தனர். பின்பு அங்கு அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் முருகேசன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆபத்தாரணப்பட்டி பிரபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பிரான்சிஸ் அந்தோணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிக்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகர செயலாளர் நவநீதபாலன், தெற்கு ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கறிஞர் ராஜசேகர்,முன்னாள் நகரச் செயலாளர் சந்திரன், குறிஞ்சி நகர் சேது, வார்டு கழக செயலாளர்கள் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், கார்மேகம், பாசறை நிர்வாகிகள் கருப்பூர் பொன்னுத்தேவன், ஜேகே.சதீஷ், காட்டாம்பூர் வெள்ளைச்சாமி, கோட்டையிருப்பு ராஜ்குமார், பேச்சாளர் நாராயணன், மாதவரயான்பட்டி முத்துமணி, பிரேமா, புதுப்பட்டி மீனாள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.