ஜெயம் ரவியை வைத்து ‘பூலோகம்’ படத்தை இயக்கியிருந்த என்.கல்யாண கிருஷ்ணன், மீண்டும் அவருடன் இணைந்துள்ள திரைப்படம் தான் ‘அகிலன்’.

ப்ரியா பவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன், தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த், இசை: சாம் சி.எஸ். இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன், இந்த படத்தில் துறைமுகம் மற்றும் அதை சுற்றி நிகழும் சம்பவங்களை திரைப்படமாக வடிவமைத்துள்ளார். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சட்டவிரோதமாகக் கப்பல் கன்டெய்னர்களில் மறைத்து, சென்னை துறைமுகத்திலிருந்து உலக நாடுகளுக்குக் கடத்தும் தாதாவான ஹரீஷ் பேரடிக்கு, அடியாளாகவும், துறைமுகத்தின் கிரேன் ஆபரேட்டராகவும் பணியாற்றி வருகிறார் அகிலனான ஜெயம் ரவி. இந்தச் சட்டவிரோத கடத்தலின் சர்வதேச தாதாவாக இருக்கும் கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதோடு, ஹரீஷ் பேரடியை அழித்து இந்தியப் பெருங்கடலின் தனி ராஜாவாக மாற வேண்டும் என்பதே ஜெயம் ரவியின் குறிக்கோள்.  ஜெயம் ரவி கபூர் கொடுத்த அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடித்தாரா? இல்லையா? ஜெயம் ரவி இந்த கடத்தல் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? அவர் எப்படி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக மாறுகிறார்? என்பதே அகிலன் படத்தின் மீதி கதை… 

 

விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் ஹார்பர் களமும் கடலும் திரையில் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. சுற்றி வளைக்காமல் முதல் காட்சியில் இருந்தே கதையின் நோக்கமும் தீவிரமும் தொடங்குவதால், அதற்கேற்ற இசையை பின்னணியில் பல இடங்களில் தீவிரமாக கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். பாடல்களும் கதையோட்டத்தில் அமைந்திருப்பதால் அதிலும் இசையில் அதிரடி காட்டி இருக்கிறார். பிரியா பவானிசங்கர், தான்யா ராஜேந்திரன் என இரு கதாநாயகிகளும் பேருக்கு மட்டும்தான். இவர்கள் தவிர, மதுசூதன் ராவ், சாய் தமிழ், மைம் கோபி எனப் பலரும் வந்து போகிறார்கள்.

மொத்தத்தில் இந்த  ‘அகிலன்’ இசையின் பலம்…. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here