கோவை:
கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கோகுல் (வயது 22). இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தனது வீட்டின் அருகில் இருந்த முத்து என்பவரின் மனைவி சொர்ணவள்ளி என்பவரிடம் அவசர தேவைக்கு வட்டிக்கு ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளார். இதற்கு கோகுல் மாதா, மாதம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
சொர்ணவள்ளியிடம் ரூ.70 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். ஆனால் சொர்ணவல்லி மீண்டும்,மீண்டும் பணம் வேண்டும் நீ கொடுத்த பணம் வட்டிக்கே சரியாகி விட்டது என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் கோகுல், வெற்று காசோலையை சொர்ணவள்ளியிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சொர்ணவள்ளி, காசோலையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்று நிரப்பி கோகுலின் வங்கி கணக்கில் போட்டுள்ளார். ஆனால் பணம் இல்லாத காரணத்தால் காசோலை திரும்பி உள்ளது.
இதனைத் தொடர்ந்து காசோலை மோசடி வழக்கை கோகுல் மீது சொர்ணவள்ளி தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கோகுலின் வீட்டிற்கு தினமும் காலை, மாலை சொர்ணவள்ளி அவரது மகன் திவாகரன் உறவினர் சுரேஷ் ஆகியோருடன் சென்று பணத்தை தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இது குறித்து கோகுல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கந்து வட்டி கேட்டு மிரட்டிய சொர்ணவள்ளி அவரது மகன் திவாகரன் அண்ணன் மகன் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.