திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம், கத்தாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாமை திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மருத்துவ பெட்டகம் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நாட்றம்பள்ளி வட்டாச்சியர் குமார், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதிமுனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் சாம்மன்னன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.