சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது வீட்டின் சமையலறையில் கடந்த ஒரு வருடமாக நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருந்துள்ளது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் பாம்பை கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து வனத்துறைக்கு வேலாயுதம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பாம்புபிடி வீரர் ரீகனின் உதவியோடு 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.