திருவாரூர்:
தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.