சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் 22 வயதான முருகன் (எ) கண்மூடி முருகன், இளைஞர் நேற்று மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவில் கொலை செய்யப்பட்டிருந்தார். 

தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று கண்மூடி முருகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கொலை செய்தவர்களை பிடிக்க தரமணி சரக உதவி ஆணையாளர் ஜீவானந்தம் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் செந்தில் முருகன், குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் புஷ்பராஜ், மகேஷ், உதயகுமார், கருணா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் வீடுகளில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்ததில் சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் கண்ணகி நகரை சுற்றி வலை வீசி தேடிய நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை கொலை நடந்த 6 மணி நேரத்தில் பிடித்துள்ளனர். பின்னர் 8 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சிவாபிரகாஷ், சதிஷ், அப்பு, துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த கரன், வெங்கடேஷ் (எ) வேட்டை, ஜாவீயர், விக்கி (எ) விக்னேஷ், அபினேஷ் (எ) அபி அட்டு என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு கண்மூடி முருகன் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தபோது அதே நேரத்தில் கஞ்சா வழக்கில் கைதனவர்களில் சிலர் சிறையில் இருந்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இருதரப்பினரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் திட்டம் தீட்டி ஒன்றாக அனைவரும் மது அறுந்துவதாக கண்மூடி முருகனை அழைத்து சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து பின்னர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

பின்னர் கைதான 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here