மின் இணைப்போடு ஆதார் எண் இணைக்க மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் மின்சார வாரிய அலுவலகங்களில் மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வசதி ஏற்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் இதற்காக 5 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்களது மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் நின்று தங்களது ஆதார் எண் விவரங்களை தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்.
இதற்காக மின்வாரிய ஊழியர்களும் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் இணையதளம் மூலம் இலவசமாக ஆதார் எண்ணை இணைக்கின்றனர். புதுக்கோட்டையில் 5 ஆயிரம் பேர் வரை மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.