சென்னை திருமங்கலம் பகுதியில் 26 வயது இளம் பெண் ஒருவர் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். ஐ.டி துறையில் வேலை செய்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இளம் பெண் தனது அறையில் படுத்து தூங்கியுள்ளார்.

காலையில் எழுந்து பார்த்தபோது, தனது அருகில் ஒரு ஆண் படுத்திருப்பதை கண்டு அதிர்சி அடைந்தார்.  அந்த ஆண் உடலில் துணி இல்லாமல் படுத்திருப்பதை கண்டு கூச்சளிட்டுள்ளார். இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நிர்வாணமாக படுத்திருந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற திருமங்கலம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஈரோடு மாவட்டம் குப்பச்சி பாளையத்தை சேர்ந்த அரசு ஊழியர் பொன்னுசாமி என்பது தெரியவந்தது. இளம் பெண் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் தனது உறவினரை பார்க்க பொன்னுசாமி சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில் குடியிருப்பில் தங்கிய அவர் இரவு குடி போதையில் உறவினரின் அறைக்கு செல்வதற்கு பதிலாக, திறந்திருந்த இளம் பெண்ணின் அறைக்கு சென்று நிர்வாணமாக தூங்கியது தெரிய வந்தது. 

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here