Wednesday, December 11, 2024
Blog

சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை- நடிகர் பாண்டியராஜன்

சென்னை:
 
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 
 
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். 
 
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.
 
இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு: 
 
வசனகர்த்தா எஸ் கே ஜீவா பேசியதாவது…
 
“‘அநீதி’ படத்திற்கு நான் எழுதிய வசனங்களை பார்த்து பாராட்டிய ஜே எஸ் கே அவர்கள் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அறியப்பட்டவர் இயக்குநராகவும் இப்படத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,  படத்தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், நடன அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் செல்வதற்கு தைரியம் வேண்டும், அது ஜே எஸ் கே  அவர்களிடம் உள்ளது அவருக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.” 
 
 
கவிஞர் மதுரகவி பேசுகையில்…
 
“ஒரு இயக்குநராக தனக்கு என்ன தேவை என்பதை வாங்குவதில் ஜே எஸ் கே அவர்கள் கெட்டிக்காரர். இந்த படம் விளிம்பு நிலை மாந்தர்களுக்கான விழிப்புணர்வு படம். இப்படத்திற்கு ஃபயர் என்று ஜே எஸ் கே சார் பெயர் வைத்திருக்கிறார். உண்மையில் அவர் ஒரு பன்முக ஃபயர். பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இப்படம் சிறப்பாக உருவாகி உள்ளது. நன்றி.”
 
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
 
“தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகி இருக்கும் ஜே எஸ் கே-க்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றார் போல ஃபயர் ஆக உள்ளது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தேசிய விருதுகள் வென்ற படங்களின் தயாரிப்பாளர் இயக்கியுள்ள முதல் படமும் தேசிய விருது பெறும் என நம்புகிறேன். இதில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”
 
கவிஞர் ரா பேசியதாவது…
 
“பாடலாசிரியராக இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்.”
 
நடன இயக்குநர் மானஸ் பேசியதாவது…
 
“இயக்குநர் ஜே எஸ் கே இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். நடிகர்கள் பாலாஜியும் காயத்ரியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரே இரவில் முழு பாடலையும் எடுத்து முடித்தோம். ஆதரவளித்த ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.” 
 
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி பாபு பேசியதாவது…
 
“சிவா சார் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருக்கு நன்றி. ஏனென்றால் அவர் மூலம் தான் ஜே எஸ் கே சாரின் அறிமுகம் கிடைத்தது. ஒரு ஒளிப்பதிவாளராக அவரை திருப்திப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி.”
 
 
படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம்குமார் பேசியதாவது…
 
“குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா சாருக்கு நன்றி சொல்லி என் உரையை தொடங்குகிறேன். என்றால் அவர் மூலமாகத்தான் ஜே எஸ் கே சார் எனக்கு பழக்கம். எட்டு வருடங்களுக்குப் பின்னரும் என்னை நினைவு வைத்து இப்படத்தில் பணியாற்ற அழைத்தார். ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்.”
 
நடிகை அனு பேசியதாவது…
 
“இது எனக்கு முதல் படம், முதல் மேடை. எஸ் கே ஜீவா சார் மூலம் தான் ஜே எஸ் கே அவர்கள் அறிமுகமானார். ஃபயர் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்துள்ளேன், ஆனால் அது படம் முழுக்க வரும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி.”
 
இசையமைப்பாளர் டி கே பேசியதாவது…
 
“எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி. வாய்ப்பளித்தார் என்பதை விட நிறைய கற்றுத் தந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங்கில் நிறைய நுணுக்கங்களை அவரிடம் இருந்து அறிந்து கொண்டேன். படத்தில் நான் இசையமைத்த ஒரு பாடல் ஆரம்பத்திலேயே அவரது மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு பாடலுக்கு நிறைய மெனக்கெட்டு அவரை திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. ஃபயர் படத்தில் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”
 
நடிகை சாந்தினி தமிழரசன் பேசியதாவது…
 
“இப்படத்தில் துர்கா என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை தாங்கி வரும் படம்தான் ஃபயர். அனைவரும் இப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து ஆதரவு தர வேண்டும்.”
 
நடிகை காயத்ரி ஷான் பேசியதாவது…
 
“சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இது எனது முதல் மேடை. அதற்காக ஜே எஸ் கே சாருக்கு நன்றி. முதலில் கதை கேட்கும் போது பயமாக இருந்தது. ஆனால் முழுவதும் கேட்டு முடித்ததும் மிகவும் பிடித்து இப்படத்தை உடனே ஒப்புக் கொண்டேன். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.” 
 
நடிகை சாக்ஷி அகர்வால் பேசியதாவது…
 
“இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது இந்த கருவை கையில் எடுத்ததற்காக ஜே எஸ் கே அவர்களுக்கு நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.”
 
நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
 
“இது கிட்டத்தட்ட எனக்கு முதல் படம் மாதிரி தான். களி மண்ணுக்கு மதிப்பில்லை. ஆனால் அதை பானையாகவோ பொம்மையாகவோ செய்தால் அதன் மதிப்பே வேறு. அது போல் என்னை இப்படத்தில் இயக்குநர் ஜே எஸ் கே மற்றும் இதர குழுவினர் செதுக்கி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.” 
 
தயாரிப்பாளர் டி சிவா பேசியதாவது…
 
“நினைத்ததை முடிப்பதில் ஜே எஸ் கே வல்லவர். துணிச்சல் மிகுந்தவர், தன்னம்பிக்கை மிக்கவர், ஆளுமை உள்ளவர், அன்பானவர். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி. பாடல்களும் முன்னோட்டமும் மிகவும் அருமையாக உள்ளன. இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது…
 
“திட்டமிடலுக்கு  பெயர் பெற்றவர் ஜே எஸ் கே. என் தந்தையாருக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டில் திட்டமிட்டவாறு படமெடுக்க முடியும் என்று ஜே எஸ் கே நிரூபித்துள்ளார். இந்த படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஃபயர் திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை.” 
 
நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன் பேசியதாவது…
 
ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை. திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். 
 
ஃபயர் திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே பேசியதாவது…
 
“என் மீது அன்பு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்த படத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ஃபயர் அனைவருக்கும் புடிக்கும். வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி. 

Kamarajar Port Limited celebrated its Silver Jubilee in Chennai

Chennai:

Kamarajar Port Limited (KPL), a subsidiary of the Chennai Port Authority, celebrated its Silver Jubilee at The Leela Palace, Chennai, highlighting its 25-year journey of operational excellence and contributions to nation-building.

The grand event was graced by Shri Sarbananda Sonowal, Hon’ble Union Minister of Ports, Shipping & Waterways, and Shri E.V. Velu, Hon’ble Minister for Public Works, Highways, and Minor Ports, Tamil Nadu.

Shri Sunil Paliwal, IAS, Chairperson of the Chennai Port Authority and Chairman, KPL, delivered the keynote address, reflecting on the port’s pivotal role in India’s maritime development, while Smt. J.P. Irene Cynthia, IAS, Managing Director, KPL welcomed the distinguished guests. She outlined the journey of Kamarajar port, and laid down the future path.

The event featured notable highlights, including the release of KPL’s Coffee Table Book, encapsulating its legacy, and the unveiling of the Master Plan 2047, outlining a sustainable growth roadmap. Master plan 2047 envisages growth of the port from the current 9 berth with 57.44 Million tonnes handling capacity to 27 berths with 254.52 million tonnes by 2047.  Foundation stones were laid for critical projects such as Capital Dredging Phase VI (₹520 crore), a 1 MLD Sea Water Reverse Osmosis Desalination Plant (₹37 crore), and an Integrated Command and Control Center (₹25 crore).

The event was made even more special by the presence of Dipika Pallikal, a Padma Shri and Arjuna Awardee, and India’s first squash player to win the World Doubles and Mixed Doubles Championship, and Andrea Jeremiah, a celebrated playback singer and actress, whose contributions to Indian cinema have earned her critical acclaim and numerous awards. Both luminaries attended as Guests of Honour and inspired the audience with their achievements, sharing their journeys during an engaging interaction session.

The celebration concluded with a heartfelt tribute to the port’s employees, their families, stakeholders, and state officials, who have been instrumental in shaping KPL’s remarkable legacy. Their collective efforts and unwavering dedication have established KPL as a beacon of sustainability, innovation, and excellence in India’s maritime sector. As KPL embarks on its next chapter, it reaffirms its commitment to driving India’s maritime aspirations and fostering sustainable development.

 

Extension of Service of Sabari Special Trains

Extension of Service of Sabari Special Trains

South Central Railway has notified for extension of services of Sabari Special trains to clear extra rush of passengers as given below:

Train No. 07159/17160 Nanded – Kollam – Nanded Specials:

The extended services of Train No. 07159 Nanded – Kollam Special will leave Nanded at 05.30 hrs on 03rd & 10th January, 2025 (Friday) and reach Kollam at 19.00 hrs, the next day (2 Services)

The extended services of Train No. 07160 Kollam – Nanded Special will leave Kollam at 02.30 hrs on 05th & 12th January, 2025 (Sunday) and reach Nanded at 15.30 hrs, the next day (2 Services)

Coach Composition: 8- AC Three Tier Coaches, 9- Sleeper Class Coaches, 3- Chair Car Coaches, 1- Second Class Coach (Divyangjan Friendly) & 1- Luggage cum Brake Van

The details of timings and stoppages of Train No. 07159/07160 Nanded – Kollam – Nanded Specials are as follows (Timings in hours):

 Train No. 07159 Nanded –Kollam Special

 

Station

Train No. 07160 Kollam –Nanded Special

Arr

Dep

Arr

Dep

05.30 (Friday)

Nanded

15.30 (Monday)

06.28

06.30

Mudkhed

14.20

14.22

07.30

07.32

Basar

12.38

12.40

08.00

08.05

Nizamabad

12.00

12.05

08.40

08.42

Armoor

11.15

11.17

09.18

09.20

Kourtla

10.10

10.12

10.00

10.02

Jagtiyal

09.38

09.40

11.00

11.02

Karimnagar

08.40

08.42

11.50

12.20

Peddapalli

07.20

07.40

12.45

12.47

Jammigunta

06.50

06.52

13.45

13.47

Warangal

05.45

05.47

15.00

15.02

Mahbubabad

04.43

04.45

15.18

15.20

Dornakal

04.23

04.25

15.40

15.42

Khammam

04.00

04.02

19.10

19.20

Vijayawada

02.10

02.20

19.48

19.50

Tenali

01.28

01.30

20.28

20.30

Bapatla

00.58

01.00

20.48

20.50

Chirala

00.48

00.50

21.33

21.35

Ongole

23.53

23.55

23.03

23.05

Nellore

22.23

22.25

23.43

23.45

Gudur

21.55

22.05

02.40

02.50

Renigunta

19.55

20.05

04.55

05.00

Katpadi

17.35

17.40

06.40

06.50

Jolarpettai

16.30

16.40

08.07

08.17

Salem

14.22

14.32

09.10

09.20

Erode

13.20

13.50

10.03

10.05

Tiruppur

12.13

12.15

11.07

11.10

Coimbatore

11.22

11.25

12.50

13.00

Palakkad

09.20

09.30

14.17

14.20

Thrissur

07.05

07.08

15.28

15.30

Aluva

05.50

05.52

15.55

16.00

ErnakulamTown

05.25

05.30

16.52

16.54

Ettumanur

04.13

04.14

17.05

17.15

Kottayam

03.55

04.05

17.26

17.27

Changanasseri

03.42

03.43

17.35

17.36

Tiruvalla

03.33

03.34

17.46

17.48

Chengannur

03.22

03.24

17.58

18.00

Kayamkulam

03.02

03.04

19.00 (Saturday)

Kollam

02.30 (Sunday)

 

  1. Train No. 07161/07162 Sirpur Kagaznagar – Kollam – Sirpur Kagaznagar Specials:

The extended services of Train No. 07161 Sirpurkagaznagar – Kollam Special will leave Sirpurkagaznagar at 10.40 hrs on 17th & 24th January, 2025 (Friday) and reach Kollam at 19.00 hrs, the next day (2 Services)

The extended services of Train No. 07162 Kollam – Sirpurkagaznagar Special will leave Kollam at 02.30 hrs on 19th & 26th January, 2025 and reach Sirpurkaganagar at 10.00 hrs, the next day (2 Services)

Coach Composition: 8- AC Three Tier Coaches, 9- Sleeper Class Coaches, 3- Chair Car Coaches, 1- Second Class Coach (Divyangjan Friendly) & 1- Luggage cum Brake Van

The details of timings and stoppages of Train No. 07161/07162 Sirpur Kagaznagar – Kollam – Sirpur Kagaznagar Specials are as follows (Timings in hours):

Train No. 07161 Sirpur Kagaznagar – Kollam Special

 

Station

Train No. 07162 Kollam – Sirpur Kagaznagar Special

Arr

Dep

Arr

Dep

10.40

(Friday)

SirpurKagaznagar

10.00

(Monday)

நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை  அப்போலோ ஒன் மையம் தொடங்கியது!

சென்னை: 

மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் [Apollo One] மையத்தில் அதன் ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை  [Integrated Neuro-ENT Vertigo and Balance Disorders Clinic] தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த புதுமையான க்ளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி (காது மூக்கு தொண்டை) நிபுணர்களின் ஆழ்ந்த நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. வெர்டிகோ, உடல் இயக்கத்தில் சமநிலையற்ற தன்மை (செயல்பாட்டு சமநிலைக் கோளாறு), விழுந்து விடுவோம் என்கிற அச்சம்  [vertigo, imbalance (functional balance disorder),  the fear of falling.] போன்றவற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை இது வழங்கும். வீடியோனிஸ்டாக்மோகிராபி (videonystagmography (VNG)), வீடியோ ஹெட் இம்பல்ஸ் டெஸ்ட் (vHIT), கலோரி சோதனை [caloric testing] மற்றும் மூளை இமேஜிங் [brain imaging] உள்ளிட்ட அதிநவீன நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களை இந்தக் க்ளினிக் பயன்படுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகளின் உடல்நிலை குறித்து துல்லியமான மற்றும் விரிவான மதிப்பீடுகளை உறுதி செய்கிறது.

மேலும், சென்னை அப்போலோ மருத்துவமனை வெர்டிகோ உச்சி மாநாடு 2024 [Chennai Vertigo Summit 2024]-ஐ டிசம்பர் 7,  8 ஆகிய தேதிகளில் சென்னை தாஜ் கோரமண்டலில் நடத்துகிறது. இந்த உச்சிமாநாடு வெஸ்டிபுலர், ஒகுலர் மோட்டார் மற்றும் உடல் இயக்க சமநிலை கோளாறுகளின் [vestibular, ocular motor, balance disorders] சிகிச்சையில் அண்மைக்கால முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்காக முன்னணி நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தளத்தை உருவாக்குகிறது.

வெர்டிகோ, உடல் இயக்க சமநிலையற்ற தன்மை மற்றும் விழுந்து விடுவோம் என்கிற அச்சம்  (fear of falling) ஆகியவை வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கும் மிக சிக்கலான குறைபாடுகளாகும். இந்த கோளாறுகளுக்கு துல்லியமான நோயறிதல் முறைகள் தேவை. அத்துடன் இவற்றின் சிகிச்சைக்கு ஒரு பல்துறை சார்ந்த சிறப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது. அப்போலோ ஒன்-னில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள க்ளினிக், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி நிபுணர்களின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கிறது. ஆடியோலஜிஸ்டுகள் மற்றும் வெஸ்டிபுலர் மறுவாழ்வு சிகிச்சையாளர்களால் [vestibular rehabilitation therapists] இது வழி நடத்தப்படுகிறது. இந்த நிலைமைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் நிவர்த்தி செய்யும் விரிவான சிகிச்சையை இந்த க்ளினிக் வழங்குகிறது. முழுமையான மற்றும் துல்லியமான நோயறிதலுக்காக வீடியோனிஸ்டாக்மோகிராபி (VNG), வீடியோ ஹெட் இம்பல்ஸ் டெஸ்ட் (vHIT), கலோரி சோதனை மற்றும் மூளை இமேஜிங் [videonystagmography (VNG), Video Head Impulse Test (vHIT), caloric testing, brain imaging] போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தக் க்ளினிக் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக ஒருங்கிணைந்த நியூரோ-இ.என்.டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அப்பல்லோ ஒன் [Apollo One]-ல் இம்முயற்சியை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான முன்னெடுப்பாகும். ஏனெனில் இது தடுப்பு சுகாதார சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், இப்பிரச்சினையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும் முன் இதன் நிலைமை குறித்து அடையாளம் காணவும் உதவுகிறது. எங்களது ஆழ்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மருத்துவர்களின் நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைப்பதன் மூலம், இச்சிகிச்சைகளில் உயரிய தரத்தை வழங்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறோம். மேலும், நாடு முழுவதும் நோயாளிகளை மையமாகக் கொண்ட மேம்பட்ட, சுகாதார சேவையை அளிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.  உடல்நலப் பராமரிப்பில் முன்னணியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைகள், எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சையை வழங்குவதற்காக தொடர்ந்து  எங்களது திறன்களையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

உடல் இயக்க சமநிலை குறைபாடுகள் எனப்படும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் மற்றும் விழும் அபாயத் தடுப்பு (fall prevention) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, வானகரம் அப்போலோ மருத்துவமனை, டான்ஸ் ஃபார் பேலன்ஸ் (Dance 4balance) என்ற முன்முயற்சியை (போட்டி) அறிமுகப்படுத்துகிறது. இந்த வித்தியாசமான முயற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள், ஒலிக்கப்படும் பிரத்தியேக இசைக்கு ஏற்ப தங்களது நடன அசைவுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் அன்றாட வாழ்க்கையில் உடல் இயக்க சமநிலைத் தன்மையின் (பேலன்ஸ் – Balance) முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வெர்டிகோ, உடல் இயக்க சமநிலையற்ற தன்மை மற்றும் வீழ்ந்து விடுவோம் என்கிற அச்சம் போன்ற உடலின் சமநிலை தொடர்பான குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க இந்த சவால் பொழுதுபோக்காகவும் விழிப்புணர்வுக் கல்வியாகவும் அமையும்.

மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்க டிசம்பர் 9-ம் தேதி ஒரு ‘சைக்ளத்தான்’ [Cyclothon] நடைபெறும். வானகரம்  அப்போலோ மருத்துவமனையில் காலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும்.  சைக்ளத்தானை பாண்டிச்சேரி ஆளுநர் கைலாசநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவும்  இதில் கலந்து கொள்கிறார்.

ஃபேமிலி படம் திரைவிமர்சனம் RATING 3.3/5

செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், அனிவீ இசையில், உதய் கார்த்தி, விவேக் பிரசன்னா, சுபிக் ஷா, ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார் என பலர் நடித்துள்ள படம் தான் ‘ஃபேமிலி படம்’.
 
படத்தின் கரு: சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட இளைஞன்.
 
ஒரு சாதாரண குடும்பத்தில் இரண்டு ஆண்களுக்கு தம்பியாக பிறந்தவர் கதாநாயகன் உதய் கார்த்தி. இவரது மூத்த அண்ணன் விவேக் பிரசன்னா ஒரு வக்கீல். இவரது இரண்டாவது அண்ணன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். நாயகன் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு தயாரிப்பாளரிடம் சென்று தன் கதையை கொடுக்கிறார் எந்த தயாரிப்பாளரும் அவர் கதையை  நிராகரித்து விடுகிறார்கள். ஒரு தயாரிப்பாளர் மட்டும் இவர் எடுத்த குறும்படத்தை பார்த்து இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஆனால் தான் சொல்லும் கதாநாயகனுக்கு இந்த கதை  படமாக்க வேண்டும் என்பது இந்த தயாரிப்பாளர் நிபந்தனை.  இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்று சொல்கிறார் கதாநாயகன் உதய் கார்த்தி. அதற்கு தயாரிப்பாளர் ஒப்பந்தப்படி அந்த  கதை  எனக்கு சொந்தம் என்று கூறுகிறார். இதனால் மன உடைந்த கதாநாயகனும் கதாநாயகன் அண்ணன்களும் தாங்களாகவே தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். தன் குடும்பத்தினருடன் இணைந்து திரைப்படத்தை தயாரித்து வெற்றி கண்டாரா? இல்லையா? என்பதே கதை  
 
படத்தில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு, சுதர்ஷன் எடிட்டிங் ஓகே. அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, நிஜ அம்மாக்களை நினைவுபடுத்துகிறார். பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார். நாயகி சுபிக்ஷாவுக்குகாட்சிகள் குறைவு என்றாலும், வரும் காட்சிகளில் கவர்கிறார். ஃபேமிலி படம் குடும்பத்தினருடன் போய் பார்க்கலாம்.
 
படம் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது…. மனதில் பெரிய அளவில் பதியவில்லை… கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
 
இந்த ஃபேமிலி படம்- குறிக்கோள் கொண்ட இளைஞனின் மனவலிமை…..
 
ராஜ் குமார்- சினிமா நிருபர் 
 

சிறு முதலீட்டுப் படங்களுக்கு மீடியாக்கள் தான் ஆதரவு – இயக்குநர் சீனு ராமசாமி

சென்னை:
 
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்…
 
நாயகன்  முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை  நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
திருநங்கை நமீதா பேசியதாவது…
எனக்கு வாய்ப்பு தந்த சமயமுரளி சார், இயக்குநர் கணேஷா இருவருக்கும் நன்றி. திருநங்கைகள் வாழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். இந்தப்படத்தின் பாடலில் நடித்தது மகிழ்ச்சி. பாடல் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
இசையமைப்பாளர் சமய முரளி பேசியதாவது…
முதல் மேடை மிக மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் காலத்தில், மியூசிக் ட்ரூப்பில் சேர்த்துக்கொள்வார்களா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் இன்று இசையமைப்பாளராக இங்கு மேடையில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு  தந்த கணேஷா பாண்டிக்கு நன்றி. அவர் தான் ஊக்கம் தந்தார். என் மனைவிக்கு, என் அப்பாவுக்குத் தான் முதன் முதலில் பாடல் எழுதினேன். என் அம்மாவுக்காகப் பாடல் எழுதியதில்லை. இந்தப்படத்தில் கணேஷா பாண்டி ஒரு சிச்சுவேசன் சொன்ன போது, தாய் தான் கடவுளை விட ஒரு படி மேல் எனப் பாடல் எழுதியுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இசையமைத்துள்ளேன் இயக்குநர் நன்றாக இருப்பதாக பாராட்டினார். ஆண்டவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 
 
இயக்குநர் கணேஷா பாண்டி பேசியதாவது… 
சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப்பிற்கு நன்றி சார். பத்திரிக்கையாளர்கள் இந்த சைலண்ட் படத்திற்கு ஆதரவு தந்து தூக்கி விட வேண்டும். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அனைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன்றி. 
 
இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது.. 
உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால்,  அது பத்திரிக்கையில் வராது ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப்பின் பேரில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.  சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம்  படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள். இப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
இயக்குநர் கணேஷ் K பாபு  பேசியதாவது.. 
இப்படத்தை ரிலீஸ் செய்யும் ராஜா சேதுபதி என் நண்பர், அவர் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அவர் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் கண்டிப்பாக நல்ல படமாகத்தான் இருக்கும். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியிருக்கிறார்.  மிக நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட் கேட்டேன் நம்ப முடியவில்லை. சின்ன பட்ஜெட்ட்டில் மிக நன்றாக எடுத்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. 
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  பேசியதாவது.. 
இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம்.  இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். வாழ்த்துக்கள். இயக்குநர் கணேஷா பாண்டி மிக  நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார். இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச்  சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம்  வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வர வில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர்  முறையாகப் பேசி  முடிவெடுக்க வேண்டும். 
 
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையராக பனியாற்றி வரும் திரு T சமய முரளி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  “சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.

‘சொர்க்கவாசல்’ திரைவிமர்சனம் RATING 3/5

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி, நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் ‘சொர்க்கவாசல்’ இந்த படம் இன்று நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.
 
படத்தின் கரு:  தனி மனிதன் சிறைச்சாலையில் எதிர்கொள்ளும் துன்பங்கள்
 
நாயகன் ஆர்.ஜே பாலாஜி குடும்பத்துடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து குடும்பம் நடத்துகிறார். எதிர்பாராத விதமாக அவர் சிறைச்சாலைக்கு செல்ல நேர்கிறது. பிறகு சிறைச்சாலையில் இருக்கும் ரவுடிகளுக்கும் இவருக்கும் சண்டை ஆரம்பிக்கிறது. சிறைச்சாலைக்குள் கலவரம் வெடிக்கிறது. சிறையில் மூன்று அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். எப்படா வெளியே போவோம் என கதறுகிறார் நாயகன். மற்றொரு புறம் ஆர்.ஜே பாலாஜி யின் அம்மாவும் நாயகியும் கலங்கி இருக்கிறார்கள்.  
 
இந்நிலையில் சிறைச்சாலையில் ஆர்.ஜே பாலாஜியை உணவு தயாரிக்கும் விடுதிக்கு சிறை காவல் அதிகாரிகள் மாற்றுகிறார்கள். சிறை கண்காணிப்பாளர் தனக்கு சாதகமாக, சிறையில் இருக்கும் ஒரு ரவுடிக்கு ஒரு பவுடர் பாக்கெட் கொடுத்து இதை உணவில் கலக்குமாறு கட்டளையிடுகிறார். இதை செய்தால் உன்னை நானே வழக்கறிஞர் வைத்து விடுவித்து உன் குடும்பத்துடன் வாழ வழி செய்கிறேன் என SP கூறுகிறார். பிறகு அந்த ரவுடிக்கு என்ன ஆனது? நாயகன் சிறையிலிருந்து வெளியில் வந்து தன் குடும்பத்தினருடன் சேருகிறாரா? இல்லையா? என்பதே கதை.
 
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி யின் எதார்த்த நடிப்பு அமர வைக்கிறது. கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசை ஓகே. சிறை காவலராக கருணாஸ் நடிப்பு பார்க்க வைக்கிறது. விசாரணை அதிகாரியாக நட்டி தனக்கு கொடுத்த பணியை செய்திருக்கிறார். நடிகை சானியா ஐயப்பன் என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். படம் விறுவிறுப்பாக செல்கிறது. சில காட்சிகளில் இரத்தம், கொலை என சலிப்பை ஏற்படுத்துகிறது.    
 
சிறையில் தீ பற்ற வைத்து சண்டை போடுவது.. சிறை காவலர்களை உள்ளேயே கொலை செய்வது… சிறை வாசிகள் சிறையை தன்வசம் ஆக்கி கலவரம் செய்வது லாஜிக் மீறல்கள் என்றே சொல்லலாம்.
 
இந்த ‘சொர்க்கவாசல்’- சிறை வாழ்க்கையின் வலி…..
 
ராஜ்குமார்- சினிமா நிருபர்  

லஞ்சத்தில் புரண்ட சமயபுரம் இன்ஸ்பெக்டர் மாற்றம்!

சமயபுரம், திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.

மணல் கடத்தல், சட்ட விரோத மதுபான கூடம், கஞ்சா விற்பனைக்கு துணை போனதாக, இவர் மீது புகார்கள் எழுந்தன. மேலும், அவர் சார்ந்த சமுதாயத்துக்கு ஆதரவாக பணியில் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்து விசாரிக்க, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். விசாரணையில், இன்ஸ்பெக்டர் தயாளன் சட்ட விரோத செயல்களுக்கு துணைபோனதும், லஞ்ச பணம் வசூலித்ததும் தெரிந்தது. இதையடுத்து, தென் மண்டலத்துக்கு பணியிடத்தை மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தவகையில், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ. 26) அதிக கனமழைக்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (நவ. 27) சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CVRDE COMMEMORATES 75TH CONSTITUTION DAY OF INDIA

The Combat Vehicles Research and Development Establishment (CVRDE), DRDO, Avadi, celebrated the 75th Constitution Day of India with great enthusiasm and reverence at the Arjun Auditorium today. The event was organized to mark the adoption of the Constitution of India and reinforce its importance among citizens.

The highlight of the celebration was a special lecture delivered by the Chief Guest, Dr. B. Damodaran, Senior Advocate, Madras High Court. In his address, Dr. Damodaran emphasized the significance of Constitutional Values, Rights, and Duties that serve as guiding principles for every Indian.

Shri J. Rajesh Kumar, Outstanding Scientist & Director, CVRDE, graced the occasion and addressed the gathering. He expressed his pride in the Constitution, describing it as a cornerstone of India’s democracy, and presented a memento to Dr. Damodaran as a gesture of gratitude for his insightful contribution.

Dr. V. Balamurugan, Outstanding Scientist & Associate Director, along with senior scientists, officers, and staff members, actively participated in the event, making it a resounding success. The celebration reaffirmed CVRDE’s commitment to upholding the values enshrined in the Constitution and spreading awareness about the responsibilities of citizens in nation-building.