Tuesday, November 5, 2024
Blog

வீட்டு வேலைக்கு நம்பி வந்த சிறுமிக்கு செய்த துரோகம்!

சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முகமது நவாஸ், 40. இவர், வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி நாசியா, 30. கடந்த ஆண்டு டிசம்பர் முதல், தஞ்சாவூரைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, நவாஸ் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த தீபாவளி அன்று, குளிப்பதற்காக கழிப்பறைக்கு சென்ற சிறுமி, நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததாகவும், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, வீட்டு உரிமையாளர் உடனே போலீசிற்கு தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த ஒருநாளுக்கு பின், கடந்த 1ம் தேதி அமைந்தகரை போலீசுக்கு, தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாமதமாக தகவல் தந்ததாலும், சிறுமியின் உடல் முழுதும் சிகரெட்டால் சூடு போட்டது போன்ற காயங்கள் இருந்ததாலும், சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். உறவினர் வாயிலாக சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து, முறையாக சம்பளம் கொடுக்காமல் இருந்தனர். பெற்றோரை பார்க்கவும் சிறுமியை அனுமதிக்கவில்லை. சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளது.

தீபாவளி நாளில் முகமது நவாஸ், அவரது மனைவி, நவாசின் நண்பர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில், சிறுமியை மயங்கி உயிரிழந்தது, விசாரணையில் தெரியவந்தது. கொலையை மூடி மறைக்க முயற்சி நடந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

போக்சோ வழக்கும் பதிவு செய்து, முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நவாசின் நண்பர் லோகேஷ், 25, அவரது மனைவி ஜெயசக்தி, 24, உறவினர் சீமா பேகம், 29, மற்றொரு வீட்டு வேலை செய்த மகேஸ்வரி, 44 உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

போலீசாரிடம் நாசியா அளித்துள்ள வாக்குமூலம்:

கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம். அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்து கொள்ள, சிறுமியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிறுமியின் தந்தை இறந்து விட்டார். ஒரு மகனுடன், அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார்.

இதனால், சிறுமியை அடிமை போல நடத்தினோம். போதிய சம்பளமும் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன் தான், சிறுமி பூப்பெய்தினார். அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை. என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

ஏதாவது காரணத்தை சொல்லி, சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினேன். திருட்டு பட்டமும் கட்டி வந்தேன். சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என, ஏதேதோ பொய் சொல்லி, அவருக்கும் ஆத்திரம் உருவாகச் செய்தேன். என் கணவரின் நண்பர் லோகேஷ் மீது, விருதுநகர் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது. மனைவி ஜெயசக்தியுடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். லோகேஷ் முரட்டுத்தனமானர். அவரிடமும், சிறுமி மீது வெறுப்பு ஏற்படும் வகையில், பொய் கதைகளை சொல்லி வந்தேன். ஒரு முறை லோகேஷ், ஜெயசக்தி ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் எடுத்து வந்த பொருள் ஒன்று தொலைந்து விட்டதாக கூறினர். இது தான் சமயம் என, அந்த பொருளை சிறுமி தான் திருடி இருப்பார் என்று கூறினேன். என்னுடன் சேர்ந்து, அவர்களும் சிறுமியை திட்டினர்.

தேடிப்பார்த்த போது அந்த பொருள் மேஜைக்கு கீழே கிடந்தது. சிறுமி எந்த வேலை செய்தாலும், குறை சொல்லி திட்டுவேன். அவரின் நெஞ்சுப்பகுதி உள்பட பல இடங்களில் அயன்பாக்ஸால் சூடு வைத்துள்ளேன். சொல்லக்கூடாத இடத்தையும் காயப்படுத்தினேன். என்னுடன் சேர்ந்து, கணவரும் சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினார். தீபாவளி அன்று எங்கள் வீட்டிற்கு, லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வந்தனர். அன்று மகேஸ்வரியும் இருந்தார். அப்போது, மகனின் பிறப்பு உறுப்பை பிடித்து சிறுமி இழுத்து விட்டதாக குற்றம் சாட்டி சத்தம் போட்டேன்.

இதனால், எல்லாரும் சேர்ந்து சிறுமியை அடித்தோம். லோகேஷ் வயிற்றில் எட்டி உதைத்தார். அதில், சிறுமி மயங்கி விழுந்து விட்டார்; மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் என, தெரியவந்து, உடலை குளியல் அறையில் கிடத்தி விட்டு, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Apollo Hospitals Advanced Stroke Care Network​24×7

Chennai:

On World Stroke Day 2024, Apollo Hospitals Chennai reaffirms its commitment to addressing the growing burden of stroke in India, where cases have surged alarmingly from 1.25 million in 2021 to approximately 1.8 million in 2023 (according to ISA). Apollo Hospitals remains dedicated to enhancing awareness, early intervention, and comprehensive stroke care to improve patient outcomes and quality of life.

Timely intervention within the first 4.5 hours, known as the “golden hour,” is critical in minimizing stroke-related disability and improving patient outcomes. Apollo Hospitals Chennai leverages state-of-the-art robotic technology, AI-enhanced diagnostic tools, and a multidisciplinary team of experts to treat stroke patients quickly and effectively. In patients with large vessel blockage thrombectomy may be useful upto 24 hrs after stroke onset.  This comprehensive approach provides patients with the best chance of recovery, reducing complications and enhancing their quality of life.

Apollo Hospital’s Stroke Network offers a comprehensive, patient-centered approach to stroke care, ensuring that every patient receives timely and precise treatment. The network comprises an integrated chain of hospitals equipped with 24/7 emergency services, AI-enhanced diagnostic facilities, and advanced imaging techniques, such as CT and MRI perfusion studies, to support fast and accurate diagnosis and to choose the ideal treatment such as Thrombolysis and Thrmombectomy. A specialized team, including neurologists, neurosurgeons, neuro intervention specialists, and critical care intensivists, collaborates to deliver tailored, multidisciplinary care. The network also provides robust neuro rehabilitation services designed to aid in long-term recovery and improve patients’ quality of life post-stroke, addressing both physical and emotional needs to support comprehensive healing.

Dr. Srinivasan Paramasivam, said, “A stroke can have devastating impact, not only for patients but for their families as well. At Apollo, we understand the urgency and precision needed in stroke care. Our multidisciplinary team is equipped with advanced technology to provide immediate, life-saving treatment. By focusing on early intervention, we are committed to achieving the best possible outcomes for our patients.”

Dr. Arul Selvan said, “Stroke care has evolved significantly over the years, and so have our capabilities. Our dedicated team and cutting-edge facilities ensure patients receive comprehensive care, from diagnosis through rehabilitation, ultimately improving long-term recovery outcomes.”

In addition to emergency intervention, Apollo Hospitals Chennai offers specialized neuro rehabilitation services to help stroke survivors regain independence and enhance their quality of life. Tailored rehabilitation programs, supported by neuro rehabilitation specialists, address each patient’s specific needs, helping them recover lost functions, improve mobility, and achieve a higher standard of post-stroke life.

As a leader in neurology and stroke care, Apollo Hospitals Chennai remains committed to pushing the boundaries of stroke management, setting new benchmarks for healthcare in India, and supporting the global fight against stroke.

மீண்டும் திரையில் நடிகர் மாதவன்!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்டிருக்கிறது.

அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது.

ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி & மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஃபோர்த் ப்ரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்டிரீட் என உலக புகழ்பெற்ற ஹாரி பாட்டர் படங்கள் படமாக்கப்பட்ட லொகேஷன்களில் அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படம் முன்னணி நடிகர், நடிகைகளின் அசாத்திய நடிப்பு, சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிரமாண்ட காட்சி அமைப்புகளால் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தலைசிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் என்.கே., உபசனா ஆர்.சி, மாத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், ரவி பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, எம். தியாகராஜன் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘ராக்காயி’ பாடல் உருவாக்கம்!

கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரிப்பில் விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் தொழில்நுட்பத்தில் ‘ராக்காயி’ பாடல் உருவாகியுள்ளது. 

இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் (Ping Records) வாயிலாக ‘ராக்காயி’ என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். தொலைக்காட்சி பிரபலமான கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான ’96’ திரைப்பட புகழ் நியதி முதன்மை வேடங்களில் இதில் தோன்றுகின்றனர்.

கலகலப்பான காதல் பாடலான ‘ராக்காயி’ ஏ.கே. பிரியன் இசையிலும், மு.வி. பாடல் வரிகளிலும் உருவாகியுள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான கார்த்திக் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை தளபதி விஜய் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் ஸ்பார்க் பாடலை பாடிய வ்ருஷா பாலு உடன் இணைந்து பாடியுள்ளார்.

இப்பாடலை விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அபு மற்றும் சல்ஸ் இயக்கி நடனம் அமைக்க, பிரம்மாண்ட பொருட்செலவில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரித்துள்ளனர்.

விர்ச்சுவல் புரொடக்ஷன் சினிமாவில் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் கூறியது போல் இந்த நவீன தொழில்நுட்பத்தை ‘ராக்காயி’ குழுவினர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்சாகமூட்டும் காதல் பாடலான ‘ராக்காயி’ பிங்க் ரிக்கார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் இன்று (நவம்பர் 4) வெளியாகிறது. இப்பாடல் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெறும் என்று நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் பிங்க் ரிகார்ட்ஸ் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அமரன் விமர்சனம் 3.9/5

சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா (சாய் பல்லவி). ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார்.

முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வீரமரணம் அடைகிறார். மேஜர் முகுந்த் எப்படி இறந்தார்? என்பதை அழுத்தமாகவும், ஆணித்தனமாகவும் காண்பித்திருக்கிறது அமரன் திரைப்படம். 

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. கதை தெரியும் என்பதால் இறுதிவரை சுவாரஸியத்தைத் தக்க வைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரையில் ஒவ்வொரு துப்பாக்கி சத்தம் கேட்கும் போதும் மனதிற்குள் பதைபதைக்கிறது. முதல் பாதி, முகுந்த்-இந்து இடையேயான காதல், பெற்றோர்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது, ஹீரோவிற்கு தனது வேலையின் மீதான பிணைப்பு என கதைகளம் தோய்வில்லாமல் செல்கிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் இனி ஆக்க்ஷன் ஹீரோவாக மாறுவார். 

சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் பிற ராணுவ வீரர்கள் அதிக கவனம் ஈர்க்கின்றனர். அதிலும் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரராக வரும் வஹீப், விக்ரம் சிங் உள்ளிட்ட பாத்திரங்கள் மனதை உலுக்குகின்றன. படத்துடன் சேர்ந்து பயணிக்க வைப்பதில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

காதல் காட்சியில் கூடுதல் கவனம் தேவை… சில துப்பாக்கி சண்டை காட்சிகள் சரியாக எடிட் செய்யவில்லை….

இந்த அமரன்- நாட்டு பற்று உள்ளவன்.    

பிரதர் விமர்சனம் RATING 2.8/5

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பிரதர்’. 

ஜெயம் ரவி, அவரது கண்ணில் படும் தவறுகளையும், அநியாயங்களையும் எதிர்ப்பவர். இதனால், தனக்கோ தன்னுடைய குடும்பத்தினருக்கோ ஏற்படப்போகும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க மாட்டார். இதனால் அப்பா அச்யுத் குமார் ஜெயம்ரவியை வெறுக்கிறார். இவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டில் பெரிய கல் ஒன்று விழுகிறது. உடனே கோபம் அடைந்த ஜெயம்ரவி மாநகராட்சிக்கு புகார் கொடுத்து கட்டிடத்தை இடிக்க அனுமதி கடிதத்தை வாங்குகிறார். உடனே அடுக்குமாடி சங்கத்தினர் எங்களிடம் சொல்லாமல் ஏன்? இப்படி செய்தாய்? என சண்டைக்கு வருகின்றனர். சண்டை நடக்கும் போது போலீஸ் வாகனத்தில் ஜெயம்ரவியை மட்டும் அழைத்து செல்கின்றனர்.

உடனே அப்பா அச்யுத் குமார் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். தனது அப்பாவை காண ஜெயம்ரவியின் அக்கா பூமிகா மருத்துவமனைக்கு வருகிறார். நான் இவனை திருத்துகிறேன் என கூறி தனது வீடான ஊட்டிக்கு அழைத்து செல்கிறார். அங்கேயும் ஜெயம்ரவி அடங்காமல் சண்டை, கோபம், நியாயம் என சட்டம் பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் காதலும் மலர்கிறது. பிறகு தனது அக்கா பூமிகா கணவரான நட்டியுடனும் சண்டை ஏற்படுகிறது. பூமிகாவின் மாமனார் ரமேஷ் ராவ் அவருடனும் சண்டை. சண்டை உச்சம் அடைந்து குடும்பம் பிரிகிறது. இந்த செய்தி ஜெயம் ரவியின் அப்பாவிற்கு செல்ல கடும் கோபம் அடைகிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

விளையாட்டு பிள்ளையாக நியாயமான இளைஞராக ஜெயம்ரவியின் நடிப்பு சிறப்பு. அக்காவாக பூமிகா, அவரது கணவராக நட்டி, ஆங்கிலம் பேசும் வக்கீலாக சரண்யா பொன்வண்ணன், அவரது கணவனாக ‘கலெக்டர்’ ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் ஆகியோர் இயக்குநர் கொடுத்த வேலையினை செய்திருக்கின்றனர். ‘மக்கா மிஷி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

ராஜேஷ் படம் என்றாலே காமெடி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த படத்தில் சரியாக இல்லை…. கதை ஜெவ்வாக இழுக்கிறது…. மருத்துவமனை சண்டையெல்லாம் கொஞ்சம் ஓவரப்பா….

இந்த பிரதர் – நியாய வெறியன் 

‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை’ தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார். “‘அமரன்’ படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படம் என்னை உணர்வுபூர்வமாக தாக்கியுள்ளது. அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையின் வீரம் மற்றும் துணிச்சலை எழுத்தாளர்-இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திரையில் மிகவும் திறம்பட கொண்டு வந்துள்ளார்.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு ஆராய்ச்சி மற்றும் நம்பகத்தன்மையுடன் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இப்படத்தை மிகவும் நம்பகத்தன்மையுடன் நிஜ லொகேஷனில் தயாரித்தமைக்காக இந்தியாவின் பெருமை லெஜண்ட் கமல்ஹாசன் சார், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் சார் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியோருக்கு எங்களின் வாழ்த்துக்களும் பெருமைகளும்! பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு உண்மையான அஞ்சலியாக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக எப்போதும் நினைவுகூரப்படும்.

அமரன் தமிழ் சினிமாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்துவார். பல எமோஷனல் தருணங்களுடன் உருவாகியுள்ள இந்த பயோபிக் அனைத்து இந்திய வீரர்களையும் பெருமை கொள்ள வைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் வங்கியின் நிதிசார் முடிவுகள் விவரம்!

நிகர இலாபம் செப்டம்பர்’23-ல் ₹1988 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹2707 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 36% உயர்ந்திருக்கிறது.


 செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’23-ல் ₹4303 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹4728 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது


 நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’23-ல் ₹5741 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹6194 கோடியாக, முந்தைய
ஆண்டைவிட 8% அதிகரித்திருக்கிறது


 கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’23-ல் பதிவான ₹805 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’24-ல் ₹891 கோடி என உயர்ந்திருக்கிறது


 சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’23-ல் 1.06% என்பதிலிருந்து 27 bps அதிகரித்து செப்டம்பர்’24-ல் 1.33% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது


 பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) செப்டம்பர்’23-ல் இருந்த 19.90% என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 114 bps மேம்பட்டு 21.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது


 கடன்கள் மீதான ஈட்டம் (YoA) செப்டம்பர்’23-ல் 8.75% என்பதிலிருந்து 2 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 8.77% ஆக அதிகரித்திருக்கிறது


 முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), செப்டம்பர்’23-ல் இருந்த 6.77% என்பதிலிருந்து 40 bps உயர்வுடன் 7.17% ஆக
செப்டம்பர்’24-ல் பதிவாகியிருக்கிறது


 மொத்த கடன்கள், செப்டம்பர்’23-ல் பதிவான ₹492288 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 12% வளர்ச்சி பெற்று ₹550644 கோடியாக அதிகரித்திருக்கிறது


 RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் செப்டம்பர்’23-ல் ₹285891 கோடி என்ற
அளவிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹325050 கோடியாக உயர்ந்து 14% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது


 மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 63% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 15%, 16% மற்றும் 8% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 14% என செப்டம்பர்’24-ல் அதிகரித்திருக்கின்றன


 ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக 44% பதிவுடன் முன்னுரிமை துறைக்கான கடன்கள் ₹188348 கோடி என பதிவாகியிருக்கிறது


 மொத்த டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 8% வளர்ச்சி கண்டு செப்டம்பர்’24-ல் ₹693115 கோடி என்ற அளவை
எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் CASA டெபாசிட்கள் முறையே 8%, 4% மற்றும் 5% என அதிகரித்திருக்கிறது


 30 செப்டம்பர்’24 அன்று உள்நாட்டு CASA விகிதம் 40.47% என பதிவாகியிருக்கிறது


 30 செப்டம்பர்’24 அன்று CD விகிதம் 79% என பதிவாகியிருக்கிறது


 GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’23-ல் இருந்த 4.97% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 149 bps குறைந்து 3.48% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’23-ல் இருந்த 0.60% லிருந்து செப்டம்பர்’24-ல் 33 bps குறைந்து 0.27 % ஆக பதிவாகியிருக்கிறது


 வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR),
செப்டம்பர்’23-ல் இருந்த 95.64% லிருந்து செப்டம்பர்’24-ல் 196 bps அதிகரித்து 97.60% ஆக பதிவாகியிருக்கிறது


 நழுவல் விகிதம், செப்டம்பர்’23-ல் 1.77% ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர்’24-ல் 1.06% ஆக
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது


 மூலதன போதுமான நிலை விகிதம் 102 bps முன்னேற்றம் கண்டு 16.55% உயர்ந்திருக்கிறது. CET-I, முந்தைய ஆண்டிலிருந்து 144 bps உயர்ந்து 13.51% ஆகவும் & அடுக்கு I மூலதனம் 138 bps முன்னேற்றத்துடன் செப்டம்பர்’24-ல் 14.01% என்ற அளவிலும் பதிவாகியிருக்கின்றன


 ஒரு பங்கிற்கான ஈட்டம், செப்டம்பர்’23-ல் இருந்த ₹63.84 என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹80.37 ஆக உயர்ந்திருக்கிறது.

 நிகர இலாபம் ஜுன்’24-ல் பதிவான ₹2403 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹2707 கோடியாக, முந்தைய
காலாண்டைவிட 13% உயர்ந்திருக்கிறது


 செயல்பாட்டு இலாபம் ஜுன்’24-ல் ₹4502 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹4728 கோடியாக, முந்தைய
காலாண்டைவிட 5% உயர்ந்திருக்கிறது


 சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), ஜுன்’24-ல் இருந்த 1.20% லிருந்து 13 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 1.33%
என முன்னேற்றம் கண்டிருக்கிறது


 கடன்கள் மீதான ஈட்டம் (YoA) ஜுன்’24-ல் இருந்த 8.69% என்பதிலிருந்து 8 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 8.77% ஆக அதிகரித்திருக்கிறது


 முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), ஜுன்’24-ல் இருந்த 7.15% என்பதிலிருந்து 7.17% ஆக செப்டம்பர்’24-ல் பதிவாகியிருக்கிறது


 GNPA (மொத்த வாராக்கடன்கள்) ஜுன்’24-ல் இருந்த 3.77% லிருந்து 29 bps குறைந்து 3.48% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA
(நிகர வாராக்கடன்கள்) ஜுன்’24-ல் இருந்த 0.39% லிருந்து செப்டம்பர்’24-ல் 12 bps குறைந்து 0.27% ஆக பதிவாகியிருக்கிறது


 பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) ஜுன்’24-ல் இருந்த 19.76% என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 128 bps மேம்பட்டு 21.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.

 நிகர இலாபம் H1FY24-ல் (நிதியாண்டு 24-ன் முதல் அரையாண்டில்) பதிவான ₹3697 கோடியிலிருந்து H1FY25-ல் ₹5110 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38% உயர்ந்திருக்கிறது


 செயல்பாட்டு இலாபம் H1FY24-ல் ₹8437 கோடி என்பதிலிருந்து H1FY25-ல் ₹9230 கோடியாக, முந்தைய ஆண்டுடன்
ஒப்பிடுகையில் H1FY25-ல் 9% உயர்ந்திருக்கிறது


 நிகர வட்டி வருவாய் H1FY24-ல் ₹11444 கோடி என்பதிலிருந்து H1FY25-ல் ₹12372 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY25-ல் 8% உயர்ந்திருக்கிறது


 உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), H1FY25-ல் ₹3.51% ஆக இருக்கிறது.


 சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) H1FY24-ன் 1.01% லிருந்து 25 bps உயர்ந்து 1.26% என முன்னேற்றம் கண்டிருக்கிறது


 பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) H1FY24-ன் 18.90% லிருந்து 148 bps உயர்ந்து, 20.38% என முன்னேற்றம் கண்டிருக்கிறது


 வருவாய்க்கான செலவு விகிதம் H1FY25-ல் 44.73% ஆக இருக்கிறது


வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:


 இவ்வங்கி, (3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட) உள்நாட்டில் 5856 கிளைகளைக் கொண்டிருக்கிறது;
இக்கிளைகளுள் 1983 கிராமப்புறங்களிலும், 1532 சிறு நகரங்களிலும், 1174 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1167
பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU-யும் (கிஃப்ட் சிட்டி கிளை) இருக்கிறது.


 இவ்வங்கி, 5217 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 12993 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு
செயலாற்றுகிறது.


டிஜிட்டல் வங்கிச்சேவை:


 H1FY25-ல் டிஜிட்டல் சேனல்கள் வழியாக ₹79,059 கோடி பிசினஸ் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தத்தில் 102 டிஜிட்டல் பயணங்கள், பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. 


 மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 20% உயர்ந்து 1.81 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.


 UPI பயனாளிகள் மற்றும் நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய ஆண்டைவிட (YoY) 27% 13% அதிகரித்து முறையே 1.95 கோடி மற்றும் 1.11 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. 


 கடன் அட்டை பயனாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் அளவைவிட 50% அதிகரித்து 2.65 இலட்சமாக
உயர்ந்திருக்கிறது; PoS முனையங்களின் மொத்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 56% அதிகரித்து 20,904 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.


விருதுகள் மற்றும் கௌரவங்கள்:


 2022-23 & 2023-24 ஆண்டுகளுக்காக SHG வங்கி இணைப்பு செயல்திட்டத்திற்காக பெண்கள் முன்னேற்றத்திற்கான தமிழ்நாடு கார்ப்பரேஷன் லிமிடெட்-யிடமிருந்து தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட பொதுத் துறை வங்கி விருதை இவ்வங்கி பெற்றிருக்கிறது.

 FY2023-24 ஆண்டின்போது நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையிடமிருந்து ஆட்சிமொழி அமலாக்கத்தில் மிகச்சிறப்பான செயல்பாட்டுக்காக ‘முதல் பரிசை’ இவ்வங்கி பெற்றிருக்கிறது.


 14.09.2024 அன்று ஹிந்தி திவாஸ் நிகழ்வின்போது உள்நாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்-ல் 3வது பரிசை இவ்வங்கி வென்றிருக்கிறது.


 வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டிருக்கும் வேளாண் உட்கட்டமைப்பு நிதிய திட்டத்தின்கீழ் NOBOL-ல் சிறந்த பரப்புரை & இலக்கை எட்டிய சாதனையாளர் விருதில் 3வது பரிசை இந்தியன் வங்கி வென்றிருக்கிறது.


 யுஎஸ்-ஐ சேர்ந்த “நியூஸ்வீக்” இதழ், இந்தியாவில் வங்கி சேவை துறையில் அதிக நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் – 2024 என இவ்வங்கிக்கு அதிகாரமளித்திருக்கிறது.


 சமீபத்தில் நடைபெற்ற பரப்புரை திட்டத்தில் (2024 ஜுன் 5 முதல் – 2024 அக்டோபர் 5 வரை) திட்ட இலக்கைவிட கடந்து 110% சாதனையை எட்டி APY மெகா மைல்ஸ்டோன் விருதுகளில் “எக்ஸலன்ஸ் மைல்ஸ்டோன்” என்ற அதிக கௌரவமிக்க விருதை வென்று இந்தியன் வங்கி பெருமை சேர்த்திருக்கிறது.

‘பிரதர்’ நல்ல குடும்ப படம்- ஜெயம் ரவி

சென்னை:

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி,  விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். அக்கா-தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத் தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் காட்சிகளின் நீளம் நான்கரை மணி நேரமாக இருந்தது. அதனை இரண்டரை மணி நேரமாக தொகுப்பது என்பது சவாலாக இருந்தது.‌ இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை தொகுத்திருக்கிறோம் . திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

கலை இயக்குநர் ஆர். கிஷோர் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு சவாலானதாக இருந்தது.‌ படப்பிடிப்புக்கு முன்னரே நிறைய முன்-தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். அதிலும் குறிப்பாக அரங்குகள், வண்ணங்கள் என பலவற்றிலும் யோசித்து பணியாற்றினோம். உடன் பணியாற்றிய மூத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். நான் வளரும் தொழில்நுட்பக் கலைஞர் என்பதால் அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்கி எனக்கு ஆதரவளித்தனர். இதற்காக படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷின் படங்களில் சண்டை காட்சிகள் இருக்காது. அவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நானும் நடிகர் ஜெயம் ரவியும் ஒய் எம் சி எ மைதானத்தில் பயிற்சி பெறும் போதே அறிமுகமாகி இருக்கிறோம். நல்ல நண்பர். நான் திரைப்படங்களில் உதவி சண்டை கலைஞராக பணியாற்றும் போதே அவரைத் தெரியும்.‌ அவருக்காக இந்த படத்தில் சண்டைக் காட்சியை  அமைப்பதற்கு வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷின் திரைப்படங்கள் பெரும்பாலும் உரையாடலை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால் பிரதர் படத்தின் கதையைக் கேட்கும் போது அவர் விஷுவலுக்கும், டயலாக்கிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது புரிந்தது.‌ இந்தக் கதை சென்னையிலும், ஊட்டியிலும் நடைபெறுவது போல் எழுதப்பட்டிருக்கிறது.‌ அதற்காக நானும் இயக்குநரும் நன்றாக புரிந்து கொண்டு உழைத்திருக்கிறோம்.

ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. ஏற்கனவே அவர்களின் தயாரிப்பில் உருவான ‘அகிலன்’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன்.

நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றும் போது தனி உற்சாகம் வந்துவிடும். ஏனென்றால் அவரும் ஒரு டெக்னீஷியன் தான்.  அவரை நடிகர் என்று சொல்வதை விட தொழில்நுட்ப கலைஞர் என்று சொல்வதுதான் பொருத்தமானது. படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் தொழில்நுட்ப ரீதியாக தடங்கல் ஏற்பட்டால், அதை உடனடியாக உணர்ந்து கொண்டு மீண்டும் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் எல்லா தருணத்தில் ஒரு சகோதரரை போல் உரிமையுடன் பழகுகிறார், பேசுகிறார்.

நட்டி நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட என்பதால் அவர் நடிக்கும் போது நடிகராகவும் இருக்கிறார் தொழில்நுட்பக் கலைஞராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு உறுதுணையாக நிறைய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.‌

அதேபோல் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் சவாலாக இருந்தது. குறிப்பாக ‘மக்கா மிஷி’ பாடலை விர்ச்சுவல் டெக்னாலஜியுடன் படமாக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால் காலதாமதம் ஏற்படும் என்ற நிலை உருவான உடன் நான்-இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் விவாதித்தோம். அதன் பிறகு அரங்குகளை அமைத்தோம். அதன் பிறகு கலை இயக்குநருடன் விவாதித்து வித்தியாசமான நவீன ஒளி அமைப்புகளை பயன்படுத்தி அந்த பாடல் காட்சியை படமாக்கினோம்.

இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களுடைய பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கினர், கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்த திரைப்படம் தீபாவளி திருநாள் அன்று குடும்பத்தினர் அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பார்க்கும் போது பூமிகாவை போல் வரும் சகோதரி இல்லையே என்ற ஏக்கம் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு ஏற்படும். சகோதரியுடன் பிறந்தவர்களுக்கு ஒரு முறை சகோதரியை காண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதற்கு ஏற்ற வகையில் இயக்குநர் ராஜேஷ் படத்தை உணர்வுபூர்வமாகவும் உருவாக்கி இருக்கிறார்,” என்றார்.

நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன் பேசுகையில், ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இன்றைய சூழலில் அரசியல் படங்கள், நகைச்சுவை படங்கள் என பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஃபேமிலியை பற்றி பேசும் படங்கள் மிக குறைவாகத்தான் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அந்தக் குறையை தீர்க்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

நடிகர் ஜெயம் ரவி பட்டாசை போல் வெடித்திருக்கிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் கதாபாத்திரத்திற்கும், இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கார்த்திக் எனும் கதாபாத்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் இந்த தீபாவளிக்கு சரவெடியாக ஜெயம் ரவியின் நடிப்பு இருக்கும்.

இந்தப் படத்தில் விடிவி கணேஷ் படபடவென பொரிந்து தள்ளுவார். இந்த தீபாவளிக்கு ரசிகர்களின் கொண்டாட்டம் இவராகத்தான் இருக்கும்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் விவேகானந்த் அருமையாக பணியாற்றி இருக்கிறார். படத்தொகுப்பு மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன் ஏனென்றால் அனைத்து காட்சிகளும் கதைக்கு தேவையான காட்சிகள்தான்.

இந்தப் படத்திற்கு அதிகம் உழைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு பிறகு இவரின் இசையில் வெளியான பாடல்களை தான் அதிகம் ரசித்திருக்கிறேன். அதே அளவிற்கு இந்த படத்தின் பின்னணி இசையும் இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ராஜேஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாள் கழித்து திரையரங்குகளில் ஒரு படத்தை பார்த்துவிட்டு ஃபீல் குட் உணர்வுடன் வீடு திரும்பும் ஒரு படமாக இந்த பிரதர் படம் இருக்கும்,” என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், ”இயக்குநர் ராஜேஷ் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர். அவர் எப்படி இது போன்ற ஃபேமிலி படத்தை இயக்க உள்ளார் என எதிர்பார்த்தேன். என்னை சந்தித்து பேசும்போது என் கதாபாத்திரத்திற்கான விஷயங்களைப் பற்றி மட்டும் சொன்னார். அவர் ஏற்கனவே நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். அதே தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டு தான் படத்தை தயாரிக்க ஒப்புக் கொள்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் அவர் மீதும் நம்பிக்கை வைத்தேன். இவர்களையெல்லாம் கடந்து எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ ஜெயம் ரவியின் படம் இது. நல்ல ஹைட் .நல்ல கலர். திறமையான நடிகர். அவருக்கு நடிப்பை விட டைரக்ஷன் நாலெட்ஜ் அதிகம். எனக்குத் தெரிந்து சிம்புவிற்கு அடுத்து இது போன்ற நாலெட்ஜ் உள்ளவர் ஜெயம் ரவி மட்டும்தான்.

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட்டான பாடல்கள் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டார். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் பேசும்போது படத்தின் பின்னணி இசையும் பிரமாதமாக வந்திருக்கிறது என்றார். ஒரு வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் கம் பேக் படமாக இருக்கும்.

பூமிகா சாவ்லாவிற்கு இந்தி தான் தெரியும். அதை விட்டால் இங்கிலீஷ் தெரியும். தமிழ் தெரியாது . இங்கிருந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது . ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் போது காட்சியை பற்றி விரிவாக கேட்டு அறிந்து கொள்வார். இந்தப் படத்தில் அவரும் நட்ராஜும் கணவன் மனைவியாக வருவார்கள். அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.  

பொதுவாக வீட்டைப் பற்றிய நினைப்பே தற்போது இல்லாது இருப்பவர்களுக்கு இந்த திரைப்படம் குடும்பத்தை பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

நடிகர் ராவ் ரமேஷ். இந்தப் படத்தில் கலெக்டராக  ஸ்ட்ரிக்ட்டான ஆபீஸராக நடித்திருக்கிறார்.  அவர் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர். இந்த படம் அவரை பெரிய அளவிற்கு உயர்த்தும். இந்தப் படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.  

இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அனைத்தையும் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் . இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் சொந்தமாக வெளியிடுகிறார். இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையை ரசிகர்களாகிய நீங்களும் கை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை பூமிகா சாவ்லா பேசுகையில், ”இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. இந்த படத்தில் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. நடிகர் ரவி அற்புதமான மனிதர், திறமையான நடிகர். பிரியங்கா அருள் மோகன் க்யூட்டான பொண்ணு.‌ இந்த திரைப்படம் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையேயான உறவை  பேசுகிறது. இந்த படத்தை திருவிழா நாளில் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகிறது.‌ கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம் திருவிழா நாளில் வெளியாகிறது.‌ இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.‌ இதற்காக  ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன்.

இதற்கு முன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினோம். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தின் திரைக்கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். அப்போதிலிருந்து இப்போது வரை நடிகர் என்பதை கடந்து உதவி செய்வதுடன் முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். இந்தப் படத்திற்காக நடிகராக மட்டுமில்லாமல் அவருக்குத் தோன்றும் எண்ணங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். படத்தை விளம்பரப்படுத்துவதற்கும் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவர் இல்லாமல் இந்த திரைப்படம் இல்லை. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர்  டைனமிக்கான தயாரிப்பாளர் . அவர் ஒரு விஷயத்தை நம்பி விட்டால் அதற்காக கடுமையாக உழைப்பவர். இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய தயாரிப்பாளர் திரையுலகத்திற்கு தேவை. இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் இவர்.

இப்படத்தின் நாயகி பிரியங்கா மிகவும் க்யூட். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை படமாக்கும் போது நான் கட் சொன்ன பிறகும் அவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்களை வைத்து படமாக்கி அதனை படம் வெளியான பிறகு இணையத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.‌ படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாகவும் உற்சாகமாகவும் உலா வருவார்.

அடுத்து பூமிகா சாவ்லா, அவரை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது வரை படத்தின் ப்ரோமோஷனுக்காக மும்பையில் இருந்து வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அவரும் இந்த படத்தை பெரிதாக நம்புகிறார். அவருக்கு படத்தில் நடித்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது என சொன்னார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மொழி விஷயத்தில் தடை இருந்தது. இருந்தாலும் காட்சியை விளக்கிய பிறகு நடித்துக் கொடுத்தார். படத்தில் ஒரு அக்கா எப்படி இருப்பார் என்பதற்கு முன்னூதாரணமாக அவரது கதாபாத்திரம் இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அக்கா இல்லாதவர்களுக்கு இது போன்றதொரு அக்கா இருக்கக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும்.

படத்தில் வி டி வி கணேஷ் என்டர்டெய்ன்மென்ட்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவையாக நடிப்பார். அவருடைய வசன உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். அவர் பேசும் வார்த்தைகள் புதிதாக இருக்கும். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கிறார். அது எனக்கு சந்தோஷமான விசயம். இந்தக் காட்சியை படமாக்கும் போது அவரது நடிப்பை பார்த்து படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தோம்.  

நட்டி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரை தொடர்பு கொண்ட உடன் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டரை எழுதியவுடன் என்னுடைய முதல் தேர்வு அவராகத்தான் இருந்தது. அவரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.‌

என்னுடைய படத்தில் பைட் சீன்ஸ்  இருக்கும். ஆனால் எடிட்டிங்கில் சென்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பைட் இருக்கிறது. பைட் மாஸ்டரும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்த படத்தில் சண்டை காட்சிகள் கூடுதலாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் விரைவாகவும், நேர்த்தியாகவும் நிறைவடைந்தது.

இந்த படத்தின் எடிட்டர் ஆஷிஷ். இந்தப் படம் மொத்தம் மூணு மணி நேரம் 40 நிமிஷம்.  ஆஷிஷ் வேகமாக எடிட் செய்வார். படப்பிடிப்பு தளத்திலேயே அன்றைய காட்சிகளை எடிட் செய்து காண்பிப்பார். அதிலேயே அவருடைய கிரியேட்டிவ் தெரியும். பெர்ஃபெக்ஷன் ஆகவும் இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும் படி தொகுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விவேக் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன் சில படங்களில் இணைந்து பணியாற்ற நினைத்திருந்தோம். ஆனால் இந்த படத்தில் தான் அது சாத்தியமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஊட்டியை  திரில்லர் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஹாரர் திரைப்படங்களின் பார்த்திருப்போம். ஆனால் ஊட்டியை வண்ணமயமாக பார்க்க வேண்டும் என விரும்பினோம். இந்தப் படத்தில் ஊட்டியை அவர் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் நடித்திருக்கிறார். நான் எழுதிய அந்த கதாபாத்திரத்திற்கு புதிதாக ஒரு நடிகர் வேண்டும்.  அந்த கதாபாத்திரம் அற்புதமானது.  ஜெயம் ரவி தான் ராவ் ரமேஷை பரிந்துரை செய்தார். அவரை சென்று பார்த்தவுடன் தமிழ் நன்றாக பேசுகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டினார். இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

என்னுடைய எல்லா படத்திலும் சீரியஸான அப்பாவியான அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா மேடம் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சரண்யா இங்கிலீஷில் பேசுவது போல் நடித்திருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுடைய திறமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இது ஒரு கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர்.  இந்த படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபோது ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் யூ சர்டிபிகேட்டை கொடுத்தார்கள். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த இரண்டு திரைப்படத்தையும் இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற அளவில் அப்டேட் செய்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதனை ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜாலியான படமாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ்  படத்திற்கான பின்னணி இசைக்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு இன்னும் இரண்டு பாடல்கள் வெற்றி பெறும். அவருக்கு நான் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படமாக ‘பிரதர்’ இருக்கும்,’ என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ”பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி.‌ லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர்.  இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம்.

இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையாக உழைப்பில் உருவான திரைப்படம் இது.

சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர்  சாமை சிறுவயதில் இருந்தே தெரியும். பேராண்மை படத்தில் மரத்தின் மீது ஓடும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கிய போது.. அவர் அவர் அந்த மரத்தின் மீது ஓடி காண்பித்து நம்பிக்கையை உண்டாக்கினார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் கிஷோர் எந்த ஒரு சிக்கலான தருணத்தையும் எளிதாக கையாளக்கூடிய திறமை மிக்கவர்.

ஃபேமிலி டிராமா ஜானர் திரைப்படங்களை எடிட் செய்வது கஷ்டமான விஷயம். என் அப்பா எடிட்டர் மோகன் நிறைய ஃபேமிலி டிராமா ஜானரிலான படங்களை எடிட் செய்திருக்கிறார். அப்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும். அதனால் இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு ஒரு திறமையான எடிட்டர் தேவை. இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு பயிற்சி வேண்டும் அனுபவம் வேண்டும். அது எல்லாம் இப்படத்தை தொகுத்த ஆசிஷுக்கு இருக்கிறது. அவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு.

நட்டி சார் ஒரு யூனிக்கான ஆக்டர். இவரை புரிந்து கொள்ளவே முடியாது ஹீரோவா..? வில்லனா ..? கேரக்டர் ஆர்டிஸ்டா..? இல்ல காமெடி பண்ண போறாரா..?  என புரிந்து கொள்ள முடியாது . ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் ஒரு அவருடைய தனித்துவமான நடிப்பு திறமை இருக்கும். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் தெரிய வருகிறது.

பூமிகா- அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் . அவரை திரையில் எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத ஒரு முகம். என்னுடைய குடும்பத்தினருக்கு அவரை மிகவும் பிடிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்கள். இந்தப் படத்தில் பூமிகாவிற்கு தம்பியாக நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். அவருடைய நடிப்பு திறமை இப்படம் வெளியான பிறகு பேசப்படும்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வி டி வி கணேஷ் எப்போதும் ஜாலியாக இருப்பார். சில நேரத்தில்.. என்னிடத்தில் சில கோணங்களை சுட்டிக்காட்டி இதில் இப்படி நடித்துப் பார் என ஆலோசனை வழங்குவார். அது ஒரு புது விஷயமாக இருக்கும். அதனால் இந்த படத்தில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன்.. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹாரிஸ் ஜெயராஜ் என்னுடைய படங்களுக்கு  ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர். ‘எங்கேயும் காதல் ‘ ‘தாம் தூம்’ ஆகிய படங்களில் எல்லா பாடல்களையும் ஆல்பமாக ஹிட் கொடுத்தவர்.‌ அதேபோல் இந்தப் படத்தையும் ஹிட்டாக்கிருக்கிறார்.‌

என்னுடைய ரசிகர்கள் நான் நடனம் ஆட வில்லை என வருத்தப்பட்டார்கள். மேலும்‌ நான் ஏ சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் என்றும் வருத்தப்பட்டார்கள். அவர்களுக்காகவும் இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். யூ சான்றிதழ் பெற்ற படம். இது. எதிர்காலத்தில் டான்ஸ் இருக்கிற படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி’ பாடல் ஹிட் ஆகியிருக்கிறது.  ஆனால் இந்த படத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஒரு எமோஷனலான பாட்டு இருக்கிறது.  இந்தப் பாட்டு .. படம் வெளியான பிறகு ஹிட் ஆகும்.

இயக்குநர் ராஜேஷ் அவர்களுடைய திறமைக்கு அவர் இன்னும் கூடுதல் உயரத்தை அடைய வேண்டும்.‌ அவர் எமோஷனை அழகாக சொல்வார்.‌ அவர் எஸ் எம் எஸ் படத்தில் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய திரைக்கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இரண்டொரு காட்சிகள் நடிக்கும் நடிகர்களுக்கு கூட நல்லதொரு வாய்ப்பை வழங்கி இருப்பார்.

இந்தப் படத்தில் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஹீரோயின் பிரியங்கா அழகான க்யூட்டான பெண்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு காட்சியில் இருக்கிறார் என்றாலே அனைவரது கவனத்தையும் கவர்ந்து விடுவார். டயலாக் சொல்லும்போதும் சிறப்பாக பேசுவார்.

இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்,” என்றார்.

 

SIMS Hospital Join hands with Former Indian Cricketer Dinesh Karthik to Strike a Powerful Blow Against Stroke

Chennai:

In a powerful display of support for stroke awareness, former Indian cricketer Dinesh Karthik joined forces with SIMS Hospitals to commemorate World Stroke Day. The event brought together a diverse group of individuals, including stroke survivors, healthcare professionals, and corporate teams, all united by a common goal: to raise awareness about stroke and inspire hope for recovery.

The highlight of the event was the thrilling ‘Strike Against Stroke’ cricket match, which saw corporate teams and healthcare professionals face off in a friendly yet competitive match. The “Strike Against Stroke” match was won by Tata Consultancy Services (TCS), while Equitas Small Finance Bank and Brakes India came in first runner-up and second runner-up, respectively. The winner of the match was Tata Consultancy Services (TCS).This unique initiative aimed to promote physical activity and a healthy lifestyle, while also highlighting the importance of being active and physically fit to prevent stroke.

“It’s an honor to be a part of this initiative,” said Dinesh Karthik “Stroke can have devastating consequences, but stroke can be avoided by maintaining a healthy level of physical activity and fitness. I urge everyone to adopt a healthy lifestyle and seek medical attention immediately if they experience any symptoms of stroke.”

Dr. Ravi Pachamuthu, Chairman, SRM Group, emphasized the hospital’s commitment to providing world-class care to stroke patients. “At SIMS Hospitals, we are dedicated to help stroke survivors regain their independence and quality of life,” he said. “We are grateful to Dinesh Karthik for his support and inspiring hope in the hearts of stroke survivors.”

One of the stroke survivors who participated in the cricket match expressed their gratitude, saying, “This event has given me hope and motivation. It’s inspiring to see so many people come together to support this cause.”

Dr. Suresh Bapu, Director & Senior Consultant, Institute of Neuroscience stated, “By adopting a healthy lifestyle, including regular exercise, a balanced diet, and avoiding smoking and excessive alcohol consumption, you can significantly reduce your risk of stroke”.