Monday, November 11, 2024
Blog

பட்டாசு விபத்து: தொழிலாளர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்!

விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூர் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவர் ஆற்றிய உரையில், விருதுநகர்! இந்தப் பெயரை சொன்னவுடன் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நினைவுக்கு வருபவர், வீரத் தியாகி சங்கரலிங்கனார். மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நம்முடைய தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று உயிர்த்தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார்.

இன்றைக்கு நாமெல்லாம் தமிழ்நாடு என்று பெருமையுடன் சொல்ல சங்கரலிங்கனாரும், அண்ணாவும் காரணம். இந்த விருதுநகர் மண் – பெருந்தலைவர் காமராஜரை நமக்கெல்லாம் வழங்கியது. காமராஜர் பெயரை சொன்னதுமே பலருக்கும் பல நினைவுகள் வரும். எனக்கு, என்னுடைய திருமணம் ஞாபகத்திற்கு வருகிறது… நினைத்துப் பார்க்கிறேன்… என்னுடைய திருமணத்துக்கு வரவேண்டும் என்று கருணாநிதி, காமராஜரை இல்லத்திற்குச் சென்று நேரில் அழைத்தார். அப்போது அவர் உடல் நலிவுற்று இருந்தார்! காமராஜர் வரவேண்டும், உடல் நலிவுற்று இருந்த அவர் மேடை ஏறவேண்டும் என்று அவருடைய கார் மேடை மேல் வரக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகளை கருணாநிதி செய்தார்!

காமராஜர் வந்தார்; என்னையும் – என் மனைவியையும் வாழ்த்தினார். இதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. காமராஜர் மறைந்த போது, ஒரு மகன் போல, அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர், நம்முடைய கருணாநிதி. முதலில், நேற்று நான் ஒரு பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அப்போது, அங்கிருந்த பணியாளர்களை சந்தித்தேன். அவர்கள் சில கோரிக்கைகள் வைத்தார்கள். அதன் அடிப்படையில், ஒரு முக்கியமான அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.

பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்! இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இதற்கான முதற்கட்ட உதவியாக 5 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

அடுத்து, தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி உற்பத்தி மற்றும் அச்சுத் தொழில் போன்ற பல்வேறு தொழில்துறைகளில் விருதுநகர் மாவட்டம் முன்னணியில் இருந்தாலும், விவசாயத்தைப் பொறுத்தவரை, மழையையும், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது. எனவே, இந்த மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கின்ற கண்மாய்களும், அணைக்கட்டுகளும், 17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றார்.

‘சுந்தரி’ சீரியல் துணை நடிகை கைது!

சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, சாதாரண உடையில் போலீஸார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்து பார்சல் ஒன்றை வாங்குவதைப் பார்த்து போலீஸார் விரைந்து சென்று அந்த இளம்பெண்ணை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவரை சோதனை செய்தபோது, அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணை அண்ணாசாலை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த மீனா (27) என்பதும், நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ‘டெடி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ என்ற சீரியலில் துணை நடிகையாக நடித்திருப்பதும் தெரியவந்தது. கோவிலம்பாக்கம் கண்ணதாசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர், எஸ்தர் என்ற தனது இயற்பெயரை மீனா என மாற்றியிருப்பதும், சினிமா மற்றும் சீரியலில் போதிய வாய்ப்பு வராததால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், அவர், வாட்ஸ்அப் குழு மூலம், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் இளைஞர்கள் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யாரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கினார், அவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனாவிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதை பொருள் கடத்திய பெண் தலைவி: சிக்கிய இளைஞர்கள்!

எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மதியம் மண்ணடி, ஜோன்ஸ் தெருவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்ததாக கொடுங்கையூர் தினேஷ் பிரதாப் (23), தண்டையார்பேட்டை சந்தோஷ் (18), புழல் பிரவீன் (20), பழைய வண்ணாரப்பேட்டை தேஜஷ் (18), மணலி பாத்திமா மவுபியா (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பாத்திமா மவுபியா தலைவியாக இருந்து செயல்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்தமாதம் 24-ம் தேதி ஆலந்தூர், மெட்ரோ ரயில் வாகன நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு ஆம்பெட்டமைன் என்ற ஒரு வகையான போதைப்பொருள் வைத்திருந்த சென்னை ஷெனாய் நகர் அருண் (40), நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஈஸ்ஜான் (34), சென்னை முடிச்சூர்மெக்கல்லன் (42) ஆகிய 3 பேரைகைது செய்தனர்.

அவர்களிட மிருந்து ஆம்பெட்டமைன், ரூ.1 லட்சம் பணம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த நபர்களைதனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.

குறிப்பாக நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் தலைமை யிலான தனிப்படையினர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு விரைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒனுஹா சுக்வு (38) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து மற்றொரு வகையான போதைப் பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரரான தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கக் கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “அதிமுக பொதுச் செயலாளராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் தனபால் தனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியங்களை பதிவு செய்த வழக்கறிஞர் ஆணையர் எஸ். கார்த்திகை பாலன் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், முன்பு நேற்று (நவ.7) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மனுதாரரான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தில் அவரை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

காதலனை வர சொல்லி கணவரை கொன்ற கேடி மனைவி!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45) லாரி ஓட்டுநரான இவருக்கு சித்ரா (42) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளியன்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் படுத்து தூங்கி உள்ளார். பின்னர், அவர் நீண்ட நேரமாக கண் விழிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராஜசேகரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ராஜமங்கலம் காவல் நிலைய போலீஸார், ராஜசேகர் உடலை மீட்டு அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், உடற்கூராய்வு முடிந்த உடன் உறவினர்களிடம் ராஜசேகர் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், அவரது கழுத்து எலும்பு முறிந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, ராஜசேகர் மரணம் இயற்கையானது அல்ல. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது மனைவி சித்ராவை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர், ராஜசேகர் ஓட்டி வந்த லாரியின் உரிமையாளர் செங்குன்றம் காமராஜர்நகரைச் சேர்ந்த தனசேகருடன் (39) சேர்த்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சித்ரா மற்றும் தனசேகரை போலீஸார் கைது செய்தனர்.

கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

லாரி உரிமையாளர் தனசேகர், லாரி ஓட்டுநரான ராஜசேகர் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, சித்ராவுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவர்கள் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவர் ராஜசேகருக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், சித்ரா அதை கண்டு கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்தி வந்து ராஜசேகர் மனைவியிடம் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சித்ரா தனசேகரை வரவழைத்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் அவர் மதுபோதையில் இறந்ததாக நாடகமாடி உள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை சம்பவம் உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சித்ரா ஏற்கனவே திருமணமாகி, 2வதாக ராஜசேகரை மணந்து அவருடன் குடும்பம் நடத்தி உள்ளார்.  என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த திருச்செந்தூர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

கந்தசஷ்டி விழா: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சூரசம்ஹாரம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின.

காலை 9 மணிக்க பூர்ணாகுதி தீபாராதனை, அதனை தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிக்கால தீபாராதனையும், யாகசாலையில் சுவாமிக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மக்கள் வெள்ளம்: தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்பட்டார். மாலை 4.30 மணியளவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முன்னதாக சிவன் கோயிலிருந்து சூரபத்மன் எழுந்தருளி உள்மாட வீதி, ரதவீதிகள் சுற்றி கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். தொடர்ந்து சூரசம்ஹாரம் தொடங்கியது.

முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 4.54 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.10 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடனும் போரிட்ட சூரபத்மனை 5.22 மணிக்கும் வதம் செய்தார். பின்னர் மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர். அப்போது கடற்கரையில் அலை கடலென திரண்டிருந்த பக்தர்கள் எழுப்பிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கச் செய்தது.

விரதம் நிறைவு: சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். கடலா கடல் அலையா என வியக்கும் வண்ணம் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோச மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.

சூரசம்ஹார விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் புகேழந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி. வேல்முருகன், தனபால், விக்டோரியா கவுரி,, மாவட்ட நீதிபதிகள் தாண்டவன், வஷிஷ்குமார், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) சுகுமாறன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் க.அஜய்சீனிவாசன், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, நெல்லை சரக டி.ஜ.ஜி மூர்த்தி, கோயில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்பு: சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி சரக டிஜஜி பா.மூர்த்தி, தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 4500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார், பைனாகுலர் மூலம் கடற்கரையை கண்காணித்தனர். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

நாளை திருக்கல்யாணம்: கந்தசஷ்டி விழாவில் 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள முருகமடத்தை சென்று சேருகிறார். அங்கு மாலை 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் காட்சி கொடுத்ததும் தெற்குரத வீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கபெருமான் – தெய்வானை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், தக்கார் ரா.அருள்முருகன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Apollo Shine Reaffirms Commitment to Student Health and Emergency Preparedness among school students

Chennai: 

Apollo Hospitals, through its not-for-profit initiative Apollo SHINE, continues to lead the charge in promoting health and safety across schools and colleges. This year Apollo SHINE is hosting a special event on “Emergency Preparedness in Schools” focusing on preparing schools to handle emergencies and equip students with critical health knowledge on the 7th of November 2024.

Apollo SHINE has been a pioneer in campus health since its initiation in 2015, touching the lives of over 1 million individuals across 175 schools and colleges in Tamil Nadu, Karnataka, Telangana, Andhra Pradesh, and Delhi/NCR. Guided by the vision of Dr. Prathap C. Reddy, Apollo SHINE aims to address the growing burden of non-communicable diseases (NCDs) by providing a health program for students, staff, and even their families.

Dr. Indira Jayakumar, Medical Director, Apollo SHINE Foundation, presented the key components of emergency preparedness in schools and how the various emergencies faced in schools can be ably handed ensuring the safety of students. She said “In medical emergencies, time is a precious commodity. These initial moments can make a significant difference”. She talked about the importance of having a well-equipped Health Room with emergency trained Medical Personnel. She presented cases of unexpected incidents in school and showcased the difference made by timely assistance of the Apollo Shine Nurses and 15 nurses were felicitated on behalf of the entire Apollo Shine School Nurse team.

An Emergency Map for all schools marking the location of the Health Room, Ambulance pick up point, with a built-in a 5-step Emergency Action Guide was launched too with a view to making this mandatory in all schools in the state.

The event featured the official launch of the Apollo Shine Student Health Ambassador program, which plays a critical role in spreading health awareness and emergency preparedness among peers. As part of the event, participants toured different types of Apollo 1066 ambulances at the venue, further strengthening their readiness to handle critical situations

Kishore Manohar, Director, Apollo Shine Foundation, said, “We are proud to reinforce our commitment to student health and emergency preparedness through the Apollo SHINE program. By empowering students with the knowledge to handle emergencies, we create a safer and healthier school environment. The launch of our Student Health Ambassador program reflects our mission to build a culture of wellness and responsibility among the younger generation.”

Apollo SHINE remains committed to its mission of promoting student health and ensuring that no child’s life is compromised when emergencies arise. Through initiatives like these, Apollo Hospitals continues to set the benchmark for student healthcare and wellness in India. 

Royal Brunei Airlines Launches Direct Flight to Chennai!

Chennai:

Royal Brunei Airlines (RB) proudly announced the official launch of its new direct flight route between Bandar Seri Begawan and Chennai, India. RB’s Airbus A320neo landed at Chennai International Airport on the 5th of November 2024 at approximately 22:50LT and was greeted by a water cannon salute. This new connection signifies a significant expansion in RB’s global network. It marks a historic step in strengthening the cultural, economic, and people-to-people ties between Brunei Darussalam and India.

The airline celebrated the launch in Chennai through a series of events in collaboration with the Brunei High Commission in India, the Brunei Economic and Development Board (BEDB), and Brunei Tourism (BT) at the ITC Grand Chola in Chennai, aimed at strengthening partnerships, promoting Brunei as a unique destination, and showcasing investment opportunities for Indian businesses. RB’s CEO, Chief Commercial Officer, STIC Travel Group (RB’s agent in India) and Brunei Tourism representatives held a press conference, where they introduced Brunei and the new route and spoke on the broader significance of this connection for both nations.

In collaboration with BEDB, an investment seminar was organised for Indian business leaders. BEDB representatives presented Brunei’s attractive investment landscape, which includes a stable political environment, modern infrastructure, and strategic access to the ASEAN market. This session fostered connections between Indian businesses and Bruneian representatives, promoting partnerships in crucial trade, technology, and tourism sectors.

The highlight of the celebrations, Brunei Night, showcased Brunei’s rich culture and hospitality with traditional Bruneian performances and a special address from H.E. Dato Paduka Hj Alaihuddin Mohd Taha, the High Commissioner of Brunei Darussalam to India. The occasion commemorated the 40th anniversary of formal diplomatic relations between Brunei and India, reflecting on decades of mutual friendship and partnership that have fostered growth and understanding across both nations.

The Chief Guest for the event was The Honorable Dr T.R.B. Rajaa, Minister of Industries, Investment Promotion and Commerce, Tamil Nadu whereas the Guest of Honour was His Excellency Shri S Vijayakumar, Head of the Ministry of External Affairs Branch in Chennai. Also in attendance was Shri B. Krishnamoorthy, IOFS, Project Director, Tamil Nadu Industrial Development Corporation, as the Special Guest.

Captain Sabirin bin Hj Abdul Hamid, CEO of Royal Brunei Airlines, remarked during the celebrations “Launching this new route is more than just a flight connection. it is a bridge between two nations. We are excited to open new opportunities for tourism, trade, and cultural exchange between Brunei and India. This route connects Bruneians and our international guests to the vibrant city of Chennai and the many experiences it has to offer, and it enhances travel options for those from India wishing to explore the peaceful beauty of Brunei Darussalam.”

Royal Brunei Airlines’ new route offers three weekly flights on Tuesdays, Thursdays, and Saturdays, providing seamless travel for leisure and business passengers. Passengers will travel aboard the modern Airbus A320neo, known for its quiet and fuel-efficient performance. With the strategic codeshare agreement with Air India, passengers flying to and from Chennai can easily connect to other major destinations in RB’s network, including Melbourne, Hong Kong, Jakarta, Singapore, Seoul, Manila, and Taipei. Since formal diplomatic ties were established in 1984, India and Brunei have enjoyed a lasting partnership enriched by a shared heritage and a commitment to development. This new route launch aligns with India’s Prime Minister Modi’s vision for an ASEAN-India Tourism Year in 2025 and supports increased travel, business exchanges, and cultural interactions.

Captain Haji Sabirin noted, “This new route exemplifies our support for Brunei’s Wawasan 2035 vision to create a dynamic and globally connected economy. We are delighted to be part of this journey, promoting Brunei as a hidden gem for Indian travellers who wish to experience tranquillity, natural beauty, and a unique cultural heritage. Royal Brunei Airlines remains committed to its mission of connecting Brunei with the world, delivering exceptional travel experiences and fostering international partnerships. The Chennai route is a promising step toward stronger regional ties and underscores RB’s commitment to expanding its presence in the Indian market. RB’s Airbus A320neo aircraft will serve the route and ensure passengers enjoy the latest comfort, technology, and efficiency with RB’s world-renowned cabin crew offering the signature Bruneian hospitality that RB is known for globally.

 

Special Trains for Sashti Festival

The following Special trains will be operated to clear extra rush of the passengers during Sashti festival as given below:

Train No. 06099/ 06100 Tambaram – Tirunelveli /Tiruchendur – Dr MGR Chennai Central Superfast Specials:

Train No. 06099 Tambaram – Tirunelveli Superfast Special will leave Tambaram at 22.30 hrs on 06th November, 2024 (Wednesday) and reach Tirunelveli at 08.30 hrs, the next day day (1 Service)

Train No. 06100 Tiruchendur – Dr MGR Chennai Central Superfast Special will leave Tiruchendur at 22.15 hrs on 07th November, 2024 (Thursday) and reach Dr MGR Chennai Central at 10.30 hrs, the next day (1 Service)

Coach Composition: 2- AC Three Tier Coaches, 7- Sleeper Class Coaches, 7- General Second Class Coaches & 2- Second Class Coaches (Divyangjan Friendly)

The details of timings and stoppages of Train No. 06099/ 06100 Tambaram – Tirunelveli/Tiruchendur – Dr MGR Chennai Central Superfast Specials are as follows (Timings in hours):

Train No. 06099 Tambaram – Tirunelveli Superfast Special

Station

Train No. 06100 Tiruchendur – Dr MGR Chennai Central Superfast Special

Dr MGR Chennai Central

(a)

10.30 (Friday)

Chennai Egmore

(a/d)

09.40/09.45

22.30 (Wednesday)

(d)

Tambaram

(a/d)

09.03/09.05

22.58/23.00

(a/d)

Chengalpattu

(a/d)

08.33/08.35

00.20/00.25

(a/d)

Villupuram

(a/d)

06.45/06.50

01.05/01.07

(a/d)

Vriddhachalam

(a/d)

06.08/06.10

03.10/03.20

(a/d)

Tiruchchirappalli

(a/d)

04.20/04.30

04.17/04.20

(a/d)

Dindigul

(a/d)

02.57/03.00

05.35/05.40

(a/d)

Madurai

(a/d)

01.55/02.00

06.13/06.15

(a/d)

Virudhunagar

(a/d)

01.08/01.10

06.34/06.36

(a/d)

Satur

(a/d)

00.40/00.42

06.54/06.56

(a/d)

Kovilpatti

(a/d)

00.23/00.25

08.30 (Thursday)

(a)

Tirunelveli

(a/d)

23.25/23.30

 

 

Seydunganallur

(a/d)

22.59/23.00

Srivaikuntam

(a/d)

22.49/22.50

Nazareth

(a/d)

22.39/22.40

Arumuganeri

(a/d)

22.24/22.25

Tiruchendur

(d)

22.15 (Thursday)

 

Advance Reservation for the above Special Trains will open shortly

லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு 3 ஆண்டு சிறை!

ஆவடி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் முரளி. இவா், தனது ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிக்க பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (தெற்கு) விண்ணப்பித்தாா். பணியில் இருந்த கண்காணிப்பாளா் கணபதி, தரகா் பாலாஜி ஆகியோா் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளனா்.

லஞ்சம் தர மறுத்த முரளி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முரளி, தரகா் பாலாஜியிடம் கொடுத்தாா். அந்த பணத்தை, அவா் கண்காணிப்பாளா் கணபதியிடம் அளித்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக திருவள்ளூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முதன்மைக் குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிபதி கே.மோகன் முன்பு புதன்கிழமை விசாணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் அமுதா ஆஜராகி வாதிட்டாா்.

வழக்கில் லஞ்சம் பெற்ற கண்காணிப்பாளா் கணபதி (58), தரகராக செயல்பட்ட பாலாஜி (40) ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.