Wednesday, October 9, 2024
Blog

தமிழக வெற்றி கழக மாநாடு பணிகள் தீவீரம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி, கடந்த 4ம் தேதி பூமி பூஜையுடன் துவங்கியது. சென்னை, திருவேற்காடை சேர்ந்த பந்தல் அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமநாதன் ஆகியோர் பூமி பூஜை அன்றே பணியை துவங்கியுள்ளனர். 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநாட்டு திடலில், மேடையானது பைபாஸ் சாலையில் செல்பவர்கள் பார்க்கும் வகையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட உள்ளது.

ரயில் பாதையில் இருந்து 500 மீட்டர் தள்ளி, மேடை அமைக்கப்படுவதால், தொண்டர்கள் ரயில்பாதைக்கு செல்வதை தடுக்க, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு மேடை தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் வடிவில், 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு 10,200 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. மேடையில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் தங்க அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

தற்போது பந்தல் அமைக்கும் பணியாளர்கள் தங்குவதற்கும், சமைப்பதற்கும் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் உணவருந்த வசதியாக மாநாட்டு திடலில் 500 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், மாநட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பணிகளை முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு பணிகளை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவ்வப்போது பார்வையிட்டு, ஆலோசனை வழங்கி வருகிறார்.

போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு!

சென்னை: 

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்- 2024 ஆனது 23.09.2024 முதல் 27.09.2024 வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் சத்திஸ்கர் மாநில காவல்துறையால் நடத்தப்பெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பளுத்தூக்கும் குழு (பளுத்தூக்குதல், வளுத்தூக்குதல், யோகா) அணியை சார்ந்த 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு 1-தங்கம், 3-வெள்ளி, 10-வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்கண்ட வீரர்களை உயர்திரு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பதக்கங்களை வழங்கினார். மேலும் கூடுதல் காவல்துறை இயக்குநர், ஆயுதப்படை, சென்னை மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர், கடலோர காவல் குழுமம், சென்னை ஆகியோர் உடனிருந்து மேற்கண்ட வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகியோர் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரயில்வே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தமிழக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரமேஷ், கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் இதுபோன்று மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஏற்கெனவே, தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்லூரி நிர்வாக ரீதியாகவும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறை தீவிரமாக செயல்படுகிறது. மேலும், கல்லூரி நிர்வாக தரப்பிலும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு பல்வேறு விதமாக அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மோதல்களில் ஈடுபடுவதால், இதுபோன்று கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தற்போதைய புதிய சட்டத்தின் அடிப்படையில், டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் மீது வழக்குப் பதிந்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால், பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Railway operates 6556 Special Trains during Diwali!

Indian Railways is set to operate 6556 special trains to facilitate smooth travel for passengers during Durga Puja, Diwali and Chhath Puja from October 1 to November 30 this year as on 6th October 2024. According to Railway officials, special trains are run every year during festivals and this year, the number of trains has been significantly increased to accommodate the surge in travelers.

It is noteworthy that during Durga Puja, Diwali and Chhath festivals, millions of passengers travel across the country. To provide them with a smooth and comfortable journey, Indian Railways has prepared to run these special trains again this year. Over the next two months, these special trains will ensure passengers reach their destinations seamlessly.  Last year, Indian Railways ran an impressive total of 4429 festival special trains, ensuring a comfortable travel experience for millions of passengers.

Every year, a large number of people from all over the country travel to Uttar Pradesh and Bihar for Durga Puja, Diwali and Chhath Puja. These festivals are not only of religious significance for the people of Uttar Pradesh and Bihar but also provide an important opportunity to reunite with their families. Due to the heavy rush of passengers during the festive season, most trains see their tickets go on the waiting list two to three months in advance. To address this, Indian Railways is once again operating special trains during the festival season this year.

Southern Railway’s Special Trains

As part of its commitment to easing passenger travel during the upcoming Durga Puja, Chhath, and Diwali festival season, Southern Railway has made concerted efforts to ensure hassle-free journeys by announcing special trains to popular destinations. These services will benefit passengers across Tamil Nadu, Kerala, Karnataka, and Andhra Pradesh, linking key cities such as Chennai, Madurai, Tirunelveli, Coimbatore, Thiruvananthapuram, Mangalore and Palakkad. The special trains are designed to accommodate the significant increase in travelers, ensuring convenient and smooth journeys.

This move is aimed at addressing the surge in demand during festivals such as Durga Puja, Diwali, and Chhath, ensuring that passengers enjoy a seamless and comfortable travel experience. In addition to South Indian destinations, Southern Railway has also notified special trains to various North-bound cities, catering to the festive travel demand across the country. To further enhance passenger convenience, additional coaches will be provided in select trains, ensuring ample capacity during peak travel times.

In Southern Railway, as on date (8th October 2024) 44 trains have been notified, including inter zonal and intra zonal trains for the Puja / Diwali / Chhath 2024 with a total of 394 trips (in comparison with last year’s 21 trains and 78 trips) – Apart from the special trains, several northbound trains have been augmented recently to cater to the festival rush.

The sectors served by the special trains include Kochuveli – Nizamuddin, Chennai – Santragachi, Tambaram – Ramanathapuram, Trichy – Tambaram, Tambaram – Coimbatore (Via Main Line, serving Mayiladuthurai, Kumbakonam, Thanjavur and Trichy) Tirunelveli – Shalimar, Erode – Sambalpur, Coimbatore – Dhanbad, Coimbatore – Chennai Egmore – Podanur, Chennai Central – Nagercoil, Madurai – Kanpur, Kochuveli – Lokmanya Tilak, Kollam – Visakhapatnam etc.

This year, the number of trips has seen a significant increase in response to the anticipated rise in passenger demand. Passengers are encouraged to book their tickets early to avoid last-minute rush and waiting lists during these festive months. Detailed schedules, routes, and timings of special trains are available on the Official Southern Railway website and IRCTC portals.

ஹரியாணாவில் பாஜக: ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி!

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பெருபாண்மையை நிரூபித்ததன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தவிர்த்து, இரு கட்சியிலும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், ஹிந்துக்கள் உள்பட 30 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. இவர்களில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும், 29 இடங்களில் போட்டியிட்ட பாஜகவில் 28 ஹிந்துக்கள் மற்றும் ஒரு சீக்கியர் வெற்றியை பதிவுசெய்தனர். இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதன் முஸ்லீம் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெற முடியவில்லை. ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தேசிய மாநாட்டு கட்சியின் சுரீந்தர் சௌத்ரி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.

முன்னாள் சட்டமேலவை உறுப்பினரான சுரீந்தர் சௌத்ரிக்கு 35,069 வாக்குகளும், ரவீந்தர் ரெய்னாவுக்கு 27,250 வாக்குகளும் கிடைத்தன. 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நவ்ஷேரா தொகுதியில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சௌத்ரியை தோற்கடித்து நவீந்தர் ரெய்னா வெற்றி பெற்றார். இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய மாநாட்டு கட்சியில் சேருவதற்காக 2022 இல் சுரீந்தர் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ராம்பன் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் அர்ஜுன் சிங் ராஜு போட்டியிட்டு வெற்றியைப் பதிவு செய்தார். இங்கு வெற்றிபெற்ற இரண்டாவது ஹிந்து மதத்தைச் சேர்ந்த வேட்பாளர் அர்ஜுன் ஆவார். அர்ஜுன் சிங் ராஜு 28,425 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சூரஜ் சிங் பரிஹாரின் 19,412 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் அர்ஜுன் சிங் ராஜூ 9,013 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார். பாஜக வேட்பாளர் ராகேஷ் சிங் தாக்கூர் 17,511 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தேசிய மாநாடு கட்சி ஒரு பெண் உள்பட ஒன்பது ஹிந்து வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அவர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மறுபுறம், காங்கிரஸ் கட்சி ஜம்முவில் 19 ஹிந்து மற்றும் இரண்டு சீக்கிய வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், அவர்களில் எவரும் வெற்றிபெறவில்லை. பெரும்பாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

இதற்கிடையில், பாஜகவின் 25 முஸ்லீம் வேட்பாளர்களில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்பட யாரும் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வைப்புத்தொகையை(டெபாசிட்) இழந்தனர். ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மாலை 4 மணி நிலவரப்படி, பாஜக – 50, காங்கிரஸ் – 35, இந்திய தேசிய லோக் தளம் – 2 சுயேச்சை- 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இதையடுத்து ஹரியாணாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 58 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

 

ஆரகன் விமர்சனம் RATING 2.5/5

ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்க்ஷன் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம்  தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் நடிப்பில் அருண் கே.ஆர் இயக்கி இருக்கும் படம் தான் ‘ஆரகன்’.

நாயகி கவிப்ரியாவும், நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசிக்கும் நடுத்தர பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் பணிக்கு செல்ல கவிப்ரியா முடிவு செய்கிறார். ஒரு சாதாரண பணிக்கு நினைத்து பார்க்க முடியாத சம்பளம் என்பதால் சந்தேகம் அடையும் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியாவை அங்கு செல்ல விடாமல் தடுத்தாலும், அதை கேட்காமல் அவர் அங்கு செல்கிறார்.

செல்போன் டவர் கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் அந்த வீடு மர்மமாக இருக்க, அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருப்பதோடு, முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்வது எங்கள் குடும்பத்திற்கு ஆகாது, என்பதால் நாங்கள் அதை பயன்படுத்த மாட்டோம், என்று ஸ்ரீரஞ்சனி சொல்கிறார்.

பிறகு நாயகியின் கைப்பேசி பழுதடைய அதன் மூலம் இருந்த காதலனுடனான தொடர்பும் இல்லாமல் போக, திடீரென்று நாயகியின் உருவத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அவருடைய தோற்றம் வயதானவராக தெரிகிறது. ஏன் தோற்றம் மாறியது? பின்னணி என்ன? என்பதே கதை.

படத்தொகுப்பாளர் சாய் தக்‌ஷா, வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்களை தொகுத்த விதம் படத்தை விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைக்கிறது. கலை இயக்குநர் காகி ஜெயசீலனின் கைவண்ணமும் கவனம் ஈர்க்கிறது. பாடல்கள் ஓகே. 

மூலிகை காட்சிகள் எல்லாம் ஓவரப்பா…. கதை ஈர்க்கவில்லை….பிரசவ காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது….     

ஆரகன்- லாஜிக் அற்றவன் 

 

நீல நிறச் சூரியன் விமர்சனம் RATING 3/5

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனரான சம்யுக்தா விஜயன் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியிருக்கும் படம் தான் நீல நிறச் சூரியன். திருநங்கைகளின் வாழ்வியலை மிகவும் உயிரோட்டமான ஒரு திரைக்கதைக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு அழகிய படைப்பு தான் இந்த ‘நீல நிறச் சூரியன்’.

இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலசந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அரவிந்திற்கு தான் ஒரு ஆண் இல்லை பெண் என்ற உணர்வு சிறு வயதில் இருந்தே இருக்கிறது. ஆசிரியர் ஆன பிறகு ஒரு சில சிகிச்சை மூலம் பெண்ணாக மாற நினைக்கிறார்.

தனது இந்த முடிவை வீட்டில் கூற, பெற்றோர்கள் முதல் மனமுடைந்தாலும் பின் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சொந்த பந்தத்தினர் விலகிச் செல்கின்றனர். தான் தனது உடையை மாற்றிக் கொள்ளும் முறையை மாற்ற இருப்பதாக பணிபுரியும் பள்ளியில் இருக்கும் தலைமை ஆசிரியரிடம் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், பள்ளி மேலிடம் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறது. சேலை அணிந்து கொண்டு முழு பெண்ணாக மாறினார் அரவிந்த். பிறகு என்ன நடந்தது? என்பதே மீதி கதை.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தில் அதிகமாக கவனம் பெறுகிறது. திருநங்கைகளின் வாழ்வியல் வலிகளை கதை தெளிவாக கூறுகிறது. தோழியாக வரும் ஹரிதாவின் நடிப்பு சிறப்பு.

சில திருநங்கைகள் ரெயில், பேருந்துகளில் ஏறி மிரட்டி பணம் கேட்பதெல்லாம் தவறு என்ற கருத்தையும் இப்படத்தில் முன் வைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீல நிறச் சூரியன்- மன அழுகை 

  

 

 

இஸ்ரேல் – ஈரான் போர் விவரம்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் என்றிருந்த போர்க்களம், தற்போது, இஸ்ரேல் – ஈரான் என உக்கிரமடைந்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர், ராணுவத் தளபதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அரசியல் ரீதியான அவமானமாக ஈரான் எடுத்துக் கொண்டது. தங்களின் ஆணிவேர்களை அசைத்து பார்த்ததாக கருதிய ஈரான், இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தொடுத்தது. இதன் காரணமாக தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படிப்பு, வேலை, உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அவர்களின் நிலை என அவரகளது குடும்பத்தினர் இங்கு கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் கவலைக்கு விடையளிக்கும் விதமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எந்த இந்தியரும் அபாயகரமான நிலையில் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார். இதனிடையே இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட்டது.

இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,769 புள்ளிககள் சரிந்து 82,497 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் 546 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ONGC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

வண்டலூர் பூங்காவில் மக்கள் கூட்டம்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு அதிக பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போல், காலை முதல் பார்வையாளர்கள் குடும்பம் குடும்பமாக வரத் துவங்கினர்.

காலை, 11 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது. அந்த வகையில் நேற்று மட்டும், 15,000 பேர் வருகை புரிந்து யானை, சிங்கம், வெள்ளைப் புலி, பறவை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசித்தனர்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம் 2024

சென்னை: 

பிராட்வே, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரமோற்சவத்தின்போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டிற்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், பிராட்வே, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. திருக்குடைகள் ஊர்வலத்தை, திருக்குறுங்குடி ஜீயர் மட மடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பப்பட்டு, அக்., 7ல், திருமலையை சென்றடையும். திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.