Thursday, July 10, 2025
Blog

மாயக்கூத்து விமர்சனம் RATING 3.4/5

ஏ.ஆர். ராகவேந்திரா இயக்கத்தில், நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், ராமசாமி, காயத்ரி, சாய் தீனா மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘மாயக்கூத்து’

விமர்சனம்:

தொடர்கதை எழுதும் ஆசிரியர் வாசன் அவர்கள் எழுதும் முக்கோண கதையை எழுதி அதை அச்சு அலுவலகத்தில் கொடுக்கிறார்.  வாசன் தன் புதிய கதையை தேடி ஒரு சிலை செய்பவரிடம் பேசுகிறார்.அங்கு தான் எழுதும் கதைக்கு நான் தான் கடவுள் என்று கூறுகிறார்.அடுத்த காட்சியில் தன் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று வாசனிடம் கேட்கிறது .இதனால் மனம் குழம்பிய வாசன் இதற்கு தீர்வு என்ன என்று ஆராய்கிறார். தனது கற்பனை கதாபாத்திரங்கள் தன்னையே கேள்வி கேட்கிறது என்று நான் கடவுளா என்று குழம்புகிறார். தனது கதாபாத்திரங்களுக்கான தீர்வை அவர் தந்தாரா? அவரது அந்த குழப்பம் தீர்ந்ததா? என்பதே கதை…

மாயக்கூத்து திரைப்படம், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு அழுத்தமான கதைக்களத்தையும், சிறந்த நடிப்பையும் கொண்ட ஒரு படம். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், கதை சொல்லும் விதத்திலும், காட்சிப்படுத்தலிலும் ஒரு சிறந்த திரைப்படமாக வெளிவந்துள்ளது. படம் பெரும்பாலும் ஒரு பொழுதுபோக்கு நாடகம். நாகராஜன் கண்ணன் வாசனாக கோபப்படும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஒரு எழுத்தாளர், தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தனக்கு எதிராக கிளர்ந்தெழும் போது, ​​அவர்களால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க போராடுகிறார். இந்தக் கதை நம்பிக்கை, கதை சொல்லல் மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நடிகர்களின் நடிப்பு இயல்பாகவும், கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் விதமாகவும் உள்ளது.

மைனஸ்: விஞ்ஞான விளையாட்டுகளால் (கிராபிக்ஸ்) படத்தில் சற்று தொய்வு ஏற்படுகிறது….. கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்…..

மொத்தத்தில் இந்த ‘மாயக்கூத்து’ கற்பனை எழுத்து.

என்னை வியக்க வைத்த மனிதர் ரஜினிகாந்த்- இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சென்னை:

பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய். 

இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்.. கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..
 
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருக குணமாக மாறினல் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாயுள்ள ‘கைமேரா’ விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்று ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
 
விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் பேரரசு, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டனர்..
 
இந்த நிகழ்வில்
 
தயாரிப்பாளரும் இயக்குநருமான மாணிக் ஜெய் பேசும்போது,
 
“இதில் நடித்துள்ள LNT எத்திஷ் என்னுடன் செல்பிஷ் படத்தில் நடித்தவர். இந்த படம் உருவாவதற்கு காரணம் விஎப்எக்ஸ் ரோஹித் தான். செல்பிஷ் படம் எடிட்டிங்கில்  கொஞ்சம் தாமதமாகும் என அவர் கூறியபோது அந்த நேரத்தில் உருவான கதை தான் இது. அந்த சமயத்தில் நானே நடிக்கிறேன் என எத்திஷ் கூறினார். உங்களுடைய உண்மையான குணாதிசயத்திற்கு நேர்மாறான கதாபாத்திரம் என்று கூறினேன். நான் நினைத்ததை விட நன்றாக நடித்திருக்கிறார். சௌமியா கிருஷ்ணா நந்து இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ரஞ்சித் என்னுடன் முதல் படத்திலிருந்து பயணித்து வருகிறார். அவரும் இந்த படத்திற்கு ரிகர்சல் இல்லாமலேயே மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படம்   தமிழ் மற்றும் தெலுகு ஹிந்தி மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டது தான், சில நடிகர்கள் மட்டுமே பெங்களூரில் இருந்து இதில் நடித்திருக்கிறார்கள்” என்று கூறினார். படத்தில் ஐந்து பாடல்கள் ஒன்று மோகன் ராஜன் எழுத மற்ற நான்கு பாடல்கள் கவிதார்கோ எழுதியுள்ளார்.
 
இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா பேசும்போது,
 
“இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படம் ஒரு சயின்ஸ் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது. படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே பயமுறுத்தும் விதமாக, பணியாற்றுவதற்கு சவாலாக இருந்தன”  என்று பேசினார்.
 
விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொண்ட ரோஹித் பேசும்போது,
 
இயல்பாகவே ஒரு சில மனிதர்களுக்கு கொஞ்சம் மிருக குணம் இருக்கும். இந்த மிருக குணம் அதீத அளவிற்கு செல்லும்போது மற்ற மனிதர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எந்தவித தாக்கத்தை கொடுக்கும் என்றும் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இயக்குநர் மாணிக்  ஜெய் அழகாக கூறியுள்ளார். இன்றைய சூழலில் ஒரு சில பெண்கள் போதை பொருளுக்கு அடிமையாகின்றனர். ஆண்களும் பெண்களும் சமம் தான் என்றாலும் கூட, சிலர் இப்படி மது அருந்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவது என ஆண்களுக்கு இணையாக போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள், அப்படி போட்டி போடும் இரு தரப்பினருக்குமே மனம் பற்றிய புரிதல் இல்லாதது தான் காரணம். மனம் என்பது நமது அடிமையாக இருக்கும் வரை நாம் ராஜாவாக இருக்கலாம்.  தூண்டிலை நோக்கி செல்லும் மீன், விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சி போன்ற ஓரறிவு கொண்ட உயிரினங்களுக்கே அந்த கதி என்றால் ஐம்புலன்களை கொண்ட மனிதர்கள் உஷாராக இருக்க வேண்டும்”  இன்று கூறினார்.
 
நடிகர் தாரை கிருஷ்ணன் பேசும்போது,
 
“மாணிக் ஜெய்யின் பரமு படத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது, அடுத்த படத்தில் தருகிறேன் இதில் கொஞ்சம் கஷ்டமான கதாபாத்திரம் தான் இருக்கிறது என்றார். இருந்தாலும் படப்பிடிப்புக்கு வாருங்கள் பார்க்கலாம் என்றும் கூறினார். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற முதல் நாளே என்னை ஜட்டியுடன் நிற்க வைத்து விட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”
என கூறினார்.
 
நாயகி சௌமியா பேசும்போது,
 
“இயக்குநர் மாணிக் ஜெய்யை எனக்கு 13 வருடங்களாக தெரியும். கடின உழைப்பாளி. இப்போது உள்ள தலைமுறைகளிடம் என்ன இல்லை. வரப்போகும் தலைமுறையினருக்கு என்ன தேவை என்பது பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டே இருப்பார். எனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி.  மனிதர்களுக்குல் மிருக குணம் ஒளிந்திருக்கும். அதை மறைத்து பெரும்பாலும் நடிப்பார்கள். சில நேரங்களில் அவர்களை அறியாமல் அது வெளிப்பட்டு விடும். அதை இயக்குநர் தெளிவாக புரிய வைத்திருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ நல்ல நடிப்பு திறமை உள்ளவர். ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்புகள் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பணம், செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தால் திறமை இல்லாதவர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்கிறது”  என்றார்.
 
கவி கார்கோ பேசும்போது,
 
இந்த படத்தில் நான்கு பாடல்களை எழுதி இருக்கிறேன்.  அதில் இடம்பெறும் இரண்டு பயண பாடல்களை என் வாழ்க்கை, என் தனிமை அந்த அனுபவங்களில் இருந்து எழுதியிருக்கிறேன்” என்று பேசினார்.
 
நாயகன் LNT எத்திஷ் பேசும்போது,
 
“இதில் என்னுடைய கதாபாத்திரம் எனக்குள் ஏதோ ஒன்றை கொடுத்தது. இந்த படம் நன்றாக வந்துள்ளது. சமீபத்தில் இங்கே வந்த சிவராஜ்குமார் சிறப்பாக தமிழில் பேசினார். நிச்சயமாக நான் அடுத்த படத்தில இதே போன்ற நிகழ்ச்சியில் பேசும்போது தமிழில் பேசுவேன்” என்று உறுதி அளித்தார்.
 
இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது,
 
“தமிழ் சினிமாவில் எப்போதுமே திறமையானவர்களுக்கு இடம் உண்டு. அது கொஞ்சம் தாமதமாகும். அதற்காக வருத்தப்பட வேண்டாம். அதற்கு இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு போல நிறைய பேர் உதாரணமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
 
இயக்குநர் பேரரசு பேசும்போது,
 
“படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா, கன்னடம் பேசினால் தப்பாக போய்விடுமா என கொஞ்சம் குழப்பம் இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் நீங்கள் எதை வந்து பேசினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்.. ரஜினிகாந்தை பிடித்து போனால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுவோம். தன்னடத்து பைங்கிளி என சரோஜாதேவியை கொண்டாடுவோம். ஆனால் இங்கிருந்து ஒரு தமிழ் நடிகையை அனுப்புகிறோம், அங்கே யாராவது தமிழ் பைங்கிளி என்று கூறுவார்களா ?
 
உலகத்தின் முதல் மொழி தமிழ் தான். அதிலிருந்து தான் தெலுங்கு போனது. மலையாளம் உருவானது. இதிலிருந்து தான் கன்னடம் உருவானது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் நம்புகிறோம். கன்னடம் வேறு, தமிழ் வேறு என்றால் ஓகே. நாங்கள் எந்த விவாதமும் பண்ண மாட்டோம். தமிழ் மண்ணில் மொழிக்கும் கலைக்கும் சம்பந்தமில்லை. ஒரு டிரைலரிலேயே த்ரில்லரை கொண்டு வருவது பெரிய விஷயம். ஆனால் அதை பார்க்கும்போது ஒரு குழப்பத்தையும் உருவாக்கியது. காரணம் இங்கே 90 சதவீதம் பேர் மிருகமாகத்தான் இருக்கிறோம். அன்று சாத்தான்குளம், இன்று திருப்புவனம்.. விசாரணை எதுவும் இல்லாமல் ஒரு ஆளை அடித்து கொன்று உள்ளார்கள். அவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும் ? அவர்கள் மிருகங்கள்தான். நாட்டில் பெரும்பாலானவர்களிடம் மிருகத்தன்மை தான் அதிகமாக இருக்கிறது. மனித தன்மை குறைந்துவிட்டது.
 
இன்று போதைப் போல் கலாச்சாரம் அதிகமாகி விட்டது சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நாட்டில் யாராவது தண்ணி அடித்து விட்டு விழுந்து கிடந்தால் அது சாதாரண விஷயம். ஒரு சினிமாக்காரர் அப்படி இருந்தால் அங்கு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிடும். நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைதாகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்தது தவறுதான். கைதானதும் சரியான விஷயம் தான். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த நபரின் முகத்தை யாருக்காவது காட்டினார்களா ? திருப்புவனம் காவல் நிலைய சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி காவலர்களின் முகத்தை எங்கேயாவது காட்டி இருக்கிறார்களா ? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் ஒரு நடிகரை தீவிரவாதியை போல சித்தரிப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் போதை பொருளை விற்றவன் புகைப்படம் கூட இப்படி வந்ததில்லை. அதனால் சினிமாக்காரர்கள் இப்படி நாம் ஒரு தவறு செய்தால் நம்மை ஒரு தேசத்துரோகிகள் போல  இந்த உலகத்தில் காட்டி விடுவார்கள் என்பதை உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும். ஆனால் தேசத்துரோகம் பண்ணியவர்களை அப்படி காட்ட மாட்டார்கள்.
 
சமூக வலைதளங்களில் கூட வன்மத்தை கக்கும் நிறைய மிருகங்கள் இருக்கின்றார்கள். ஒரு படத்தை பார்க்காமலேயே விமர்சனம் செய்து அதை காலி செய்கிறார்கள். அப்படி ஒரு நோய் இப்போது வந்திருக்கிறது. இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கே பிடிக்கவில்லை என்பது போல, அந்த படத்தை காலி பண்ணி விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த கைமேரா படத்தின் கதையம்சம் போல வந்தது இல்லை. இயக்குநர் மாணிக் ஜெய்யின் இந்த புதிய முயற்சி வெற்றி அடைய வேண்டும்” என்று பேசினார்.
 
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
 
“நான் ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செஞ்சுட்டு இருக்கும்போது கன்னட திரையுலகின் ஐம்பதாவது ஆண்டுவிழா. நடைபெற்றபோது என்னையும், என்னுடைய நண்பர் இயக்குனர் ராஜா ரவியையும் அனுப்பி வெச்சாங்க.. அந்த நிகழ்வில் ராஜ்குமார் சார் வர்றாரு. அப்போதைய முதல்வர், ராமகிருஷ்ண ஹெக்டே, சௌகார் ஜானகி அம்மா. வாணிஸ்ரீ, ஆர்த்தி, விஷ்ணுவர்தன்,  அதோட சேர்த்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாரும் மேடையில இருக்காங்க. அங்க இந்த மொழி பிரச்சனை வரும்போது எப்படி அத கையான்டாங்க அப்படின்னு நான் என் கண்ணால் பாத்தேன். சௌகார் ஜானகி அழகா கன்னடத்துல ஆரம்பிச்சு தமிழ்ல பேச ஆரம்பிச்சாங்க.. உடனே. கன்னடத்தில் பேசுங்க என கீழே இருந்து ஒரு சவுண்ட் விட்டாங்க. அவங்க பேச்சை நிறுத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி. சரோஜா தேவி பேசி முடிக்கும்போது எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது எனக்கு தமிழ் சினிமா தான் அப்படின்னு சொன்னாங்க. திரும்பவும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க.. இது வந்து மொழியை எதற்கு பயன்படுத்துறோம். எந்த உணர்வை தூண்டுவதற்கும் மொழியை பயன்படுத்துகிறோம் என்பது தான்… அந்த இடத்துல பெரிய ரகளை ஆயிடுச்சி. அந்த உணர்வை தூண்டி விட்டுட்டாங்க ஜனங்க. அதன்பிறகு. ராஜ்குமார் சார் வந்து எல்லோரையும் அமைதிப்படுத்தினார்.
 
எனக்கு உங்களுக்கு ரஜினி சார். நிறைய பேருக்கு ரஜினி சார பிடிக்கும். சில பேருக்கு புடிக்காது. என்னை வியக்க வைத்த ஒரு மனிதர் அவர்.. அப்போ நான் பெரிய ரஜினி சார் ரசிகர் இல்ல. ஆனா அந்த நிகழ்வுல. ரஜினி சார் அன்னைக்கு பேசின ஒரு பேச்சு இருக்கு பாருங்க.. அற்புதமான பேச்சு.. அதை அவரே ஞாபகம் வச்சுருக்காரான்னு தெரியாது எனக்கு.. அப்போ. கன்னடத்துல பேசுனாரு.. கன்னடத்துல பேசும்போது அவர், இது தவறு. இதோ.. ராஜ்குமார் நான் நடிக ஆசைப்பட்ட சமயத்தில் என்னை கூப்பிட்டு டேய் நீ எல்லாம் கருப்பா இருக்க. நீயெல்லாம் நடிக்கும் நடிகனாக முடியாது. போடா வேற எதாச்சும் வேலைய பாரு என்று துரத்திவிட்டார்.. ஆனா என்னை கூப்பிட்டு நடிக்க வச்ச ஒரே ஆளு பாலச்சந்தர் சார் தான்.. அப்படின்னு சொன்னதும்  எல்லாம் அமைதியா. ஆயிட்டாங்க. மொழி என்பது. நம்ம நினைக்கிறதை அடுத்தவங்களுக்கு சொல்ற ஒரு கருவி தான்னு சொன்னார்.. 
 
மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை. மொழியை மீறின ஒரு உணர்வுதான் கலை. இந்த கலைக்கு அதுவும் குறிப்பாக திரைப்படக் கலைக்கு மொழி வந்து ஒரு இடைஞ்சலாகவோ, ஒரு தடங்கலாகவோ, ஒரு பிரச்சனையாகவோ இருக்கக்கூடாது..தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நான்கு மொழிப் படங்களும் எடுத்த ஊர் தான் இந்த சென்னை.. சினிமா துறையை பொறுத்தவரையிலும் ஒரு செட்டுல கன்னடத்துல பேசுவாங்க. அதே செட்டு காலியாகவும். அதுக்குள்ள தமிழ் நடிகர்கள் போய் அதே படத்துல நடிப்பாங்க. இங்க ராமராவ் அங்க எம்ஜியாரு, இந்த பக்கம் சிவாஜி சார், இந்த பக்கம் ராஜ்குமார், அந்தபக்கம் விஷ்ணுவர்தன். எல்லாரும் ஒன்னா கூடி கும்மி அடிச்சு எவ்வளவு அழகா இருந்த நம்ம சினிமா இன்னிக்கு ஒரு கேரவனுக்குள்ள போய் ஒழிஞ்சிடுச்சு. ஒரு கேரவனோட. மொதல்ல அதுல இருந்து மீட்டெடுப்போம். கேரவனுக்குள் இருந்து இந்த சினிமாவை மீட்டெடுத்தாலே நமக்கு பெரிய சக்சஸ் வந்துரும். 
 
பெரும்பாலும் இன்னைக்கு பெரிய பெரிய ஹீரோக்களுக்கே அவங்க கதையை கேட்டதாக தெரியல. எங்களை எல்லாம் டார்ச்சர் பண்ணி என்ன கதை கரெக்டா சொல்லுங்க அப்படின்னு கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பிச்சவுடனே கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” என்றார். 

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று (ஜூலை 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா அபார வெற்றி:

மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. மழை நின்ற பின், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். ஆலி போப் 24 ரன்களும், ஹாரி ப்ரூக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இந்த பார்ட்னர்ஷிப்பை வாஷிங்டன் சுந்தர் உடைத்தார். வாஷிங்டர் சுந்தரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடான் கார்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும், பிரைடான் கார்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 99 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்….!

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள ஹோப் பார்க் பகு​தியை சேர்ந்​தவர் செந்​தில்​கு​மார் (50). இவர் 23 ஆண்​டு​களாக அறி​வியல் ஆசிரிய​ராக பல்​வேறு அரசுப் பள்​ளி​களில் பணி​யாற்றி உள்​ளார். இந்​நிலை​யில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசுப் பள்​ளி​யில் பணி​யில் சேர்ந்​தார்.‌ அங்கு 6 முதல் 9 வகுப்பு வரை அறி​வியல் பாடம் எடுத்​துள்​ளார். சில நாட்​களுக்கு முன்​னர் அந்​தப் பள்​ளிக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதற்​காக போலீ​ஸார் சென்​றனர்.

பயிற்சி வகுப்பு முடிந்​ததும் 6-ம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி ஒரு​வர், அறி​வியல் ஆசிரியர் செந்​தில்​கு​மார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக புகார் கூறி​யுள்​ளார். தொடர்ந்து பல மாணவி​களும் அவர் மீது புகார் தெரி​வித்​தனர். பின்​னர், ஆசிரியர் செந்​தில்​கு​மார் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக 21 மாணவி​கள் புகார் அளித்​தனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த போலீ​ஸார், இதுகுறித்து உயர​தி​காரி​களுக்​கும், குழந்​தைகள் நலப் பிரிவு அதி​காரி​களுக்​கும் தகவல் தெரி​வித்​தனர். தொடர்ந்​து, ஊட்டி ஊரக காவல் ஆய்​வாளர் விஜயா தலை​மையி​லான போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, போக்சோ சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்து செந்​தில்​குமரை கைது செய்​தனர். இந்​நிலை​யில், ஆசிரியர் செந்​தில்​கு​மார் தற்​காலிக பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக முதன்மை கல்வி அலு​வலர் நந்​தகு​மார் தெரி​வித்​தார்.

அவர் கூறும் போது:

‘பாலியல் புகாரில் கைதாகி​யுள்ள ஆசிரியர்செந்​தில்​கு​மார் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார். ஆசிரியர்​களுக்கு விழிப்​புணர்வு மற்​றும் கவுன்​சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றார்.

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் பாலகுருசாமி (50) என்பவா் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கண்ணன் (50), சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜபாண்டி (37), ராஜசேகா் (29), ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கமலேஷ் ராம் (28), ரமேஷ் (20) ஆகிய ஐந்து பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், இறந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை- கே.ராஜன்

சென்னை:

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன்’ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
 
விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில்  படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  
 
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ”இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கே. ராஜன் இங்கு வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்கு சென்றேன்.
 
இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதை விட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். ‌ அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து தான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன். இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி கே சக்திவேல் மணப்பாறையில் மிகப்பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். ‘பெரிய மருது’, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எனது தாத்தாவும் நாடக நடிகர் தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒருநாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன். 1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன்.  89ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக ‘கயிலன்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசுகையில், ”என்னை நம்பி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.‌ இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. எல்லா பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. இப்படத்தின் பின்னணி இசையை ஹரி அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஜூலை 25 வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
பின்னணி இசையமைப்பாளர் ஹரி பேசுகையில், ”இப்படத்தின் கதை சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளியான பிறகு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். கலைஞர்கள் தங்களுடைய அற்புதமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.  அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ”இந்தப் பட முன்னோட்டத்தின் இறுதியில், ‘போராட வேண்டும். போராடினால் தான் அனைத்தும் கிடைக்கும்’ என்ற செய்தி இடம்பெறுகிறது. சினிமாவில் கதையை உருவாக்குவதற்கும் போராட வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனை தேடுவதற்கு ஒரு போராட்டம் வேண்டும். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும் . அதற்கும் போராட வேண்டும். இதையெல்லாம் கடந்து படத்தின் வெளியீட்டிற்காகவும் போராட வேண்டும்.
 
நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் இயக்குநர் அஜித் இந்த மேடையில் இருக்கிறார். முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாதது. அது போல் முதல் படமும் முதல் மேடையும் மறக்க முடியாதது.  பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையை போன்றது இது. அவருக்குள் இருக்கும் தவிப்பை நான் உணர்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இன்று பெரிய படம் எது சின்ன படம் எது என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஊடகத்தினர் முடிவு செய்கிறார்கள். அதே தருணத்தில் ‘கன்டென்ட் வின்ஸ்’ என்று சொல்வேன். கன்டென்ட் நன்றாக இருந்தால் மக்கள் மிகப் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கன்டென்ட், அதற்கான ஆய்வு மற்றும் நியாயமான உழைப்பு இருந்தால் மக்களின் ஆதரவு உறுதி. அண்மையில் வெளியான ‘டி என் ஏ’, ‘மார்கன்’ ஆகிய படங்களுக்கும் இது சாத்தியமானது.  
 
இன்றைய தேதியில் இயக்குநர்களை விட பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதல் காட்சியை இயக்குநர் சொல்லத் தொடங்கியதுமே பார்வையாளன் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என சொல்லி விடுகிறான். அதனால் எந்த இயக்குநர் ரசிகர்களை சிறந்த அறிவாளியாக நினைத்து அவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து படத்தை இயக்குகிறாரோ அவரது திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இது திரில்லராக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த திரில்லர் அர்த்தமுள்ள திரில்லராக இருக்கும் பட்சத்தில் 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்,” என்றார்.
 
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில்  ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான ‘ஜீரோ’ படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.  அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.  கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.  
 
இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை  எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து ‘சிகரம் தொடு’ எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள்.
 
ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த’ கயிலன்’ திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
 
நடிகர் பிரஜின் பேசுகையில், ” இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த ஆண்டின் எனது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
 
தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். ‘கயிலன்’ நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
 
இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்,” என்றார்.
 
பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ”இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான்.‌ ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து நடிக்கிறீர்களா? எனக் கேட்டார்  நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம்.‌ இருந்தாலும் கமல் நான் மாட்டை பிடிக்கிறேன் நீங்கள் மைக்கை பிடியுங்கள் என்றார். இது எனக்கு பொருத்தமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன். தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.
 
இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதை சொல்லி விடுவேன். இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னை அருமையாக கவனித்தார்கள்.
 
நான் முதலில் ஒரு சினிமா ரசிகன். அதனால் நான் பார்க்கும் எந்த படங்களையும் யாருடைய மனதும் காயப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்க மாட்டேன். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது வருத்தம் அடைவேன்.
 
தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காலத்தில் பாட்டு புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும் .அதை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செல்வார்கள்.
 
இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், நன்றி,” என்றார்.
 
நடிகை ஷிவதா பேசுகையில், ”’நெடுஞ்சாலை’ படத்திலிருந்து ‘கயிலன்’ படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
 
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”’கயிலன்’ என் பிள்ளை அரசகுமார் தயாரித்த படம். அது என் படம் தான். அரசகுமார் 1991ம் ஆண்டில் நான் நடத்தும் வண்ணாரப்பேட்டை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது நான் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் தலைவர். என்னை சந்தித்து ‘புதுக்கோட்டையில் இருந்து வருகை தந்திருக்கிறேன். சங்கத்தில் இணைய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அப்போது அவரை பேச அனுமதித்தேன் அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது. அப்போதே இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என கணித்தேன்.
 
தொடர்ந்து கடுமையாக உழைத்தார், துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள் என  அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரை சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.‌ அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார்.
 
அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்கு தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே என பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தி தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.
 
2001ம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, ‘என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தை தயாரிக்கிறேன்’ என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.‌  
 
அதனைத் தொடர்ந்து நான் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்.
 
25 ஆண்டுகளுக்கு முன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்து தயாரிப்பாளராகி இருக்கிறார்.
 
தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் ‘கயிலன்’ என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன்.
 
இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.  
 
தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.
 
300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்,” என்றார்.
 
இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ”உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
 
படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார்.  எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
 
நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.
 
‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.
 
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், ‘நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்’ என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
 
என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.
 
நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.
 
இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.
 
மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.  
 
இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.
 
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
 
கே ராஜன் பேசும்போது, தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.
 
நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.  
 
இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் ‘கயிலன்’ பெயருக்கான பொருளை சொன்னார்.
 
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
 
கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான ’16 வயதினிலே ‘படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.  
 
இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்,” என்றார்.
 

பீனிக்ஸ் படத்தின் விமர்சனம் RATING 3.8/5

சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘பீனிக்ஸ்’

விமர்சனம்:

சூர்யா சேதுபதி பொதுமக்கள் முன்னிலையில் MLA -வை கொடூரமாக வெட்டிக் கொலை செய்கிறான். காவல்துறை அவனைக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க, அந்த MLAவின் குடும்பமும், கட்சியும் ஹீரோவை எப்படியாவது கொன்று பழிதீர்க்கத் துடிக்கிறார்கள். MLA வின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய அடியாட்களை உள்ளே அனுப்புகிறார். அவர்களை சூர்யா சேதுபதி வெறித்தனமாக அடித்து உள்ளே மாஸ் ஆகிறார். அடுத்து உள்ளே உள்ள போலீஸ் அதிகாரிக்கு பணம் கொடுத்து கொலை முயற்சி நடக்கிறது. அதையும் துணிந்து எதிர்கொள்கிறார் நம்ம அறிமுக ஹீரோ. ஹீரோவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது அவர் மீது தொடர்ந்து பெட்ரோல் பாட்டில்கள் வீசப்படுகிறது. பிறகு என்ன நடந்தது? ஏன் இந்த கொலை முயற்சிகள் நடக்கிறது? என்பதே கதை….

எந்தவித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாத நடிப்பை சூர்யா வழங்கியுள்ளார். முதல் படம் மாதிரியே தெரியவில்லை. அவரது ஆக்க்ஷன் காட்சிகள் கோபப்படும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. கதை எனப் பார்க்கும்போது, இது மிகவும் சாதாரணமான, பழி வாங்கும் கதைதான். புதிதான கருவோ, திரைக்கதை அமைப்போ இல்லாவிட்டாலும், முதல் படத்தை தொந்தரவு தருமளவிலான தொய்வுகள் இல்லாமல் அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அனல்’ அரசு. படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை தெறிக்க விடுகிறது. “ஜெயிக்கிறது பிரச்னையா, இல்ல நாங்க ஜெயிக்கிறதுதான் பிரச்னையா” என்ற வசனம் சொல்லும் போது அரங்கத்தில் விசில் பறக்கிறது. குழந்தையை சிறைக்குத் தொலைத்த அம்மாவாக புலம்பும் காட்சிகளில் நடிகை தேவதர்ஷிணி கவர்கிறார்.

வில்லனாக எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

மைனஸ்: ஜெயிலில் இப்படி வெறித்தனமான கொலை காட்சிகள்! நீதிமன்ற வாசல் சண்டை காட்சியில் இன்னும் கவனம் தேவை!!

மொத்தத்தில் இந்த ‘பீனிக்ஸ்’ வலிமை வாய்ந்தவன், நிச்சயம் அடிப்பான்!

‘டிராகன்’நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்!

சென்னை:

ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.  
 
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.
 
இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான், ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  
 
இந்நிகழ்வில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமான நாள் இது. ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா. பொதுவாக தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘டிராகன்’. இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை ‘ டிராகன்’ பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.
 
கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு பேசுகையில், ”குழுவாக இணைந்து இந்த படத்தை வழங்கி வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் ‘இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்’ என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட ‘கோட்'( GOAT) திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் ‘டிராகன்’ திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் ‘DUDE’ படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ் -அஸ்வத்- பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி,” என்றார்.
 
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ‘நான் ஹீரோவாக போகிறேன்’ என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் ‘டிராகன்’ என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.  
 
‘லவ் டுடே’ படத்தை விட ‘டிராகன்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
 
கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”ஒரு படம் நன்றாக இருக்கும் போது அந்தப் படத்திற்கான வேர்ட் ஆஃப் மவுத் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பாராட்டினீர்கள். அதை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தீர்கள். இதற்காக இந்த தருணத்தில் ஊடகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.
 
அதன் பிறகு ‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.
 
‘டிராகன்’ படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.  
 
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் ‘டிராகன்’ அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.
 
‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் ‘டிராகன்’ படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் ‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக ‘டிராகன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
 
என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘டிராகன்’ படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.  
 
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
நூறாவது நாள் வெற்றி விழாவில் ‘டிராகன்’ பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கன் விமர்சனம் RATING 3.3/5

டிகர் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, அஜய் திஷன் (அறிமுகம்), பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘மார்கன்’

விமர்சனம்:
சென்னையில் ஒரு இளம்பெண் வித்தியாசமான முறையில் கொல்லப்படுகிறார் என கதை தொடங்குகிறது. ஊசியை கழுத்தில் செலுத்தியதும் சில நொடிகளிலேயே உடல் முழுவதும் கருப்பாகி மரணம் நிகழ்கிறது. இறந்தவுடன் உடல் குப்பை தொட்டியில் வீசப்படுகிறது. மும்பையில் இருந்து தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. கொலையான அன்று அஜய் திஷன் சிசிடிவி கேமராவில் பதிவாக, அவரைத் தேடி விஜய் ஆண்டனி செல்கிறார். அவரை பிடித்து வந்து விசாரணையை தொடங்குகிறார். அதில் சில திருப்பங்களைச் சந்திக்கிறார். இறுதியில் கொலையாளி யார்? வித்தியாசமான முறையில் உடலை கருப்பாக்கி கொல்வதற்கான காரணம் என்ன? என்பதே மீதி கதை….

விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்திருக்கிறார். அஜய் திஷன் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக இருக்கிறது. அறிமுக படத்திலேயே நன்றாக நடித்திருக்கிறார். நீருக்குள் அவர் செல்லும் காட்சிகள் பார்வையாளர்களிடம் சுவாரஸ்யத்தைத் தருகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிறது. நீருக்குள் எடுக்கப்பட்ட ஷாட்டுகள் சிறப்பு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. நீருக்குள் இருந்தபடி கொலையான இடத்திற்கு அஜய் கதாபாத்திரம் செல்வது விறுவிறுப்பை தூண்டுகிறது. 

மைனஸ்: ஆமை காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை…. சில லாஜிக் சொதப்பல்கள் படத்தில் இருக்கிறது….

மொத்தத்தில் இந்த ‘மார்கன்’ விறுவிறுப்பானவன்.

சினிமா அனுபவங்களை என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன்- விஜய் சேதுபதி

சென்னை:

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, “பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய நண்பனின் மகன் சூர்யா நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நானும் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் நேரடியாக சென்று கொண்டே இருங்கள் சூர்யா. நீங்கள் மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு மாமனாக வாழ்த்துகிறேன்”.

பாடலாசிரியர் விவேகா அவர்கள் பேசும்போது, “மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி எஸ் அவர்கள் பிரமாதமாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா அவர்களின் முதல் படமே சிறப்பாக வந்துள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வருவதற்கு இந்த படமே ஒரு எடுத்துக்காட்டு. பீனிக்ஸ் என்பது ஒரு நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கைதான் ஒரு வாழ்க்கையின் முக்கியமானது. நம்பிக்கைதான் நம்மை நகர்த்துகின்ற மிகப் பெரிய பலம். இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்”.

நடிகர் மூணார் ரமேஷ் அவர்கள் பேசும்போது, விஜய் சேதுபதி அவர்களுடனும் நடித்துள்ளேன், அவருடைய மகன் சூர்யாவுடனும் நடித்துள்ளேன். சண்டை பயிற்சிக்கான உலகளாவிய விருதிகளில் அனல் அரசு அவர்களின் பெயரும் இடம் பெற்று இருந்தது. அதை நாம் பெரிதாக கொண்டாடாமல் விட்டும். இந்த படத்திற்கு சாம் சி எஸ் சிறப்பாக இசையமைத்துள்ளார். இந்த படம் நிச்சயம் வெற்றியடையும்”.

நடிகர் திலீபன் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனல் அரசு அவர்களின் படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவருடைய இயக்கத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருந்தேன். சூர்யா அவர்கள் மிக அருமையாக நடித்துள்ளார். அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

நடிகை தேவதர்ஷினி அவர்கள் பேசும்போது, “ட்ரெய்லர் மிகவும் சிறப்பாக உள்ளது. சூர்யா அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார். இது போன்ற படங்களில் நடிக்க மிகப்பெரிய கடின உழைப்பு தேவை. என்னுடைய மகன் நடித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அனல் அரசு அவர்களின் உழைப்பு ட்ரெய்லர் பார்க்கும்போது தெரிகிறது. அனைவரது கடின உழைப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் அவர்களின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்த படத்தை பார்த்து பாராட்ட வேண்டும்”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசும்போது, “பத்திரிக்கையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழகத்திலிருந்து சென்று ஹிந்தி, மலையாளம், கன்னடா என்று அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் ஒரு கலைஞர் என்றால் அது அனல் அரசு அவர்கள் தான். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படம் பீனிக்ஸ். ஒரு தமிழராக இருந்து ஹிந்தியில் 18 படங்களில் வேலை செய்துள்ளார். அதில் சல்மான் கான் உடன் மட்டும் 7 படம். தளபதி விஜய் அவர்களுடன் 9 படம் பணிபுரிந்துள்ளார். ஒரு முழு ஆக்சன் படமாக பீனிக்ஸ் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி அவர்களின் வெற்றி பலருக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. விஜய் சேதுபதி அவர்களின் வெற்றியைப் பார்த்து 100 பேர் வந்தால், அவரின் மகனின் வெற்றியை பார்த்து 200 பேர் வருவார்கள். விஜய் சேதுபதி அடையாளம் என்றால், சூர்யா ஒரு குறியீடு. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி கொடுங்கள்”.

தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். முழு படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் பீனிக்ஸ் நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்த படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எச் திரில்லராக படம் உருவாகியுள்ளது. இந்த படம் நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள். படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான விருதை அனல் அரசு அவர்கள் நிச்சயம் பெறுவார். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. தமிழ் சினிமாவின் டைகர் ஷெராபாக நிச்சயம் சூரியா வருவார். தமிழ் சினிமாவில் நான் அடிக்கடி பார்க்கும் படம் மகாராஜா. இனிமேல் நான் அடிக்கடி பார்க்கும் படமாக பீனிக்ஸ் இருக்கும். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களை கொடுத்துள்ளார், தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி அவர்கள். அவரை தாண்டி அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார். அனைவரும் திரையரங்கில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்”.

இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். சூர்யா அவர்களுக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். அனல் அரசு அவர்களுடன் ஒரே ஒரு படம் மட்டும் தான் ஒர்க் பண்ணி உள்ளேன், அதிலும் ஒரே ஒரு பைட் சீன் தான். இருப்பினும் நாம் என்ன எடுக்கப் போகிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் ஒரு சில மாஸ்டர்களில் இவரும் ஒருவர். இந்த படத்தின் டிரைலர் பார்க்கும்போது படம் அற்புதமாக வந்துள்ளது தெரிகிறது. பசங்க படத்தில் கமிட் ஆகும்போது விஜய் சேதுபதி அவர்களை தெரியும். விஜய் சேதுபதி அவர்களிடம் மனிதாபிமானம் உள்ளது. சூர்யா அவர்களிடம் நல்ல ஒரு தெளிவு உள்ளது. பல நாட்களாக சினிமாவை கரைத்து குடித்தது போல் தெளிவான பேசினார். விஜய் சேதுபதி அவர்களைவிட, அவரது மகன் சூர்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் விஷால் அவர்களை பார்க்கும்போது என்ன தோன்றியதோ அதேபோல் தான் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது தோன்றுகிறது. விஜய் சேதுபதி அவர்களின் 10 படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தாலே சூர்யா நல்ல நடிகராக வந்துவிடலாம்.  ஒரு அண்ணனாக நானும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய. வாழ்த்துக்கள்.

பெப்சி விஜயன் அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். சாதாரணமாக ஒருவர் வெற்றியடைய முடியாது. அனல் அரசு அவர்கள் நிறைய சிரமங்களை சந்தித்துள்ளார். நல்ல ஒரு எமோஷனல் இல்லையென்றால் ஒரு சண்டை காட்சி வேலை செய்யாது. இயக்குனர் அனல் அரசு அவர்கள் இந்த படத்தை இயக்குவதற்கு நிறைய சிரமங்களை சந்தித்துள்ளார். சூர்யா அவர்களை இந்த படத்தில் நடிகராக அறிமுகம் செய்துள்ளார் அனல் அரசு. சிரித்துக் கொண்டே வேலை வாங்குவதில் அனல் அரசு மிகச் சிறந்தவர். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மக்களின் மனதை கவரும் தன்மை சூர்யா அவர்களிடம் உள்ளது. இந்தப் படம் உங்களுடைய வெற்றி என்று மார் தட்டி சொல்லலாம். சாம் சி எஸ் அவர்கள் சிறப்பாக இசையமைத்துள்ளார், குறிப்பாக பின்னணி இசையில் அசத்தியுள்ளார். அனல் அரசு அவர்கள் ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும் தேடித்தேடி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் நடிகர் சூர்யா நிச்சயம் இருப்பார். சூர்யா பேர் இல்லை பெருமை”.

இயக்குனர் வினோத் அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். சூர்யாவை நான் அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன்.  ஆனால் அனல் அரசு முந்திவிட்டார். ஒரு ஹீரோ ஒரு ஆக்சன் ஹீரோ ஆவதற்கு 10 படங்கள் தேவைப்படும், ஆனால் சூர்யாவிற்கு முதல் படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். ஒரு காட்சி நன்றாக இருக்கிறது.. நன்றாக இல்லை என்று சொல்வதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை இசையமைக்க முயற்சிப்பேன். ஒரு படம் மக்களிடம் சென்று சேருவதற்கு கமர்சியல் விஷயங்கள் அவசியம். என்னுடைய தலையீடு இல்லாமல் என் மகன் சூர்யா திரைக்கு வரட்டும் என்று விஜய் சேதுபதி அவர்கள் சொல்லி இருந்தார். பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியிடம் சொன்னேன் உங்கள் மகன் சிறப்பாக நடித்துள்ளார் என்று. இந்த படத்தின் வேலைகளை முடிக்கும் போது ஒரு திருப்தி இருந்தது. என்னுடைய சினிமா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அனல் அரசு அவர்கள் ஒரு லட்சியமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். பீனிக்ஸ் படம் எனக்கும் சூர்யா அவர்களுக்கும் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இந்த படத்தில் வேலை பார்த்தது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

விஜய் சேதுபதி அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு அவர்கள் கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.

கதையின் நாயகன் சூர்யா சேதுபதி பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையை நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க பயன்படுத்தி கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும், நண்பர்களும், பத்திரிகையாளர்களும் தான் காரணம். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது. நான் சோர்வாக இருக்கும் போது எனக்கு உத்வேகம் அளித்து இந்த படத்தில் நடித்த அனைவரும் உதவினார்கள். தேவதர்ஷினி அவர்கள் படத்தில் மட்டும் அம்மா இல்லை, நிஜ வாழ்க்கையிலும் எனது அம்மா தான். என் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி. இயக்குனர் அனல் அரசு அவர்கள் நிறைய சொல்லிக் கொடுத்தார். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குனர் அனல் அரசு அவர்கள் பேசும்போது, “இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்த படமே இல்லை. இந்த படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம். ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அவர்களிடம் சொன்னேன். ஒன்றரை வருடமாக சூர்யா அவர்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார். சூர்யா அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் கடமையாக உழைத்துள்ளனர். சண்டை பயிற்சி இயக்குனராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குனராக என்னுடைய முதல் படம் எது. அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்”.

படத்தின் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்கள் பேசும்போது, “எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இங்கு வந்த பத்திரிகையாளர் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம். என்னுடைய மகன் மற்றும் மகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றிகள்”.