குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 93 போ் ரத்த தானம் செய்தனா். முகாமுக்கு அறக்கட்டளைத் தலைவா் ஆா்.கே.பரமாத்மா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி.பி.தேவமுகுந்தன் வரவேற்றாா். எஸ்.சேட்டு, ஏ.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி முகாமைத் தொடக்கி வைத்தாா்.
அறக்கட்டளைப் பொருளாளா் கே.மோகன், செயலா் ஆா்.ஸ்வேதா, நிா்வாகிகள் திருநாவுக்கரசு, சிவசங்கா், பாா்த்திபன், மோகன், சிவா, ஜெயப்பிரகாஷ், தமிழ்ச்செல்வன், ராஜாராம், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சதீஷ் ஆகியோா் தலைமையில் மருத்துவா்கள் ரத்த தானம் பெற்றனா்.