மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காரைக்குடியில் பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் 87வது சிவ ஜெயந்தி விழாவை காலை 10 அளவில் மகர நோன்பு திடலில் அமைந்துள்ள கார்த்திகேயன் பள்ளி வளாகத்தில் இராமநாத சுவாமி ஜோதீர்லிங்க தரிசனத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.
திருமதி.Dr. ஸ்வேதா ஜீவானந்தம் பள்ளி செயலாளர் கார்த்திகேயன் துவக்க பள்ளி குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்கள் திரு.மீனாட்சிசுந்திரம் ஒய்வு பெற்ற DGM யூனியன் பாங்க் ஆப் இந்தியா தியான அறையை துவங்கி வைத்தார்கள்.மேலும் திருமதி பாண்டி செல்வி பத்திர எழுத்தர் மற்றும் திரு மதியழகன் பத்திர எழுத்தர் அவர்கள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள் .இவ்வித்தியாலத்தின் பொறுப்பு சகோதரி இரஜாயோகினி BK மீனா அவர்கள் தியான வர்ணனை மற்றும் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்கள்.