இராமநாதபுரம்:
 
கடந்த 2015-ம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி நகர் அருகே ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மீனாகுமாரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.மாதவமகேஷ், 2.செல்வம்,3.கோபால், 4.சீனிவாசன், 5.பாலயோகேஷ், 6.விஜயகுமார், 7.முத்துராஜா, 8.கோபி ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
 
இராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி திருமதி.விஜயா அவர்கள், எதிரிகள் மாதவமகேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 20000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் இரண்டு வருடம் சாதாரண சிறை தண்டனையும்  மீதமுள்ள ஆறு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 10000 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் இரண்டு வருடம் சாதாரண சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here