வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் கோவை மாவட்டத்தில் 6,400 படுக்கைகள் தயாராக உள்ளதாக கலெக்டர் கூறினார். அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர கால ஒத்திகை நேற்று நடைபெற்றது. புதிய வகை கொரோனா சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரேனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கொரோனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அவசர கால ஒத்திகை நாடு முழுவதும் நடத்தப் படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி கோவை அரசு தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்தி ரிகளிலும் அவசர கால ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகை இதில் கொரோனா பாதித்த நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாக னங்களில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவது, அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், இணை நோய்கள் உள்ளதா? என்பது குறித்த பரிசோதனை செய்வது, உள்நோயாளிகளாக அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன், மருந்து கையிருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை பார்க்கப்பட்டது. படுக்கைகள் தயார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற அவசர கால ஒத்தி ைகயை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 6,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 3,537 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாகவும். மேலும் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கோவையில் இதுவரை 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 96.9 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும், 14 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முக கவசம் அணிந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளி லும் படுக்கைள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.