இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்…!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை சாம்சங் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு உள்ளது.

புதிய கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், இந்த மாடல் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1, 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178