சென்னை:
சென்னை தீவுத்திடலில் 47-வது சுற்றுலா பொருட்காட்சி, கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பொருட்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
பொருட்காட்சி தொடங்கி 41-வது நாளான நேற்று முன்தினம், 2,717 பெரியவர்களும், 445 சிறுவர்களும் வந்தனர். கடந்த 41 நாட்களில் 5 லட்சத்து 438 பெரியவர்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 617 சிறுவர்கள் என மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 55 பேர் வருகை தந்துள்ளனர் என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.