பெரம்பலூர் மாவட்டத்தில் 1432- ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் 16.05.2023 அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட வெங்கலம் (கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு), வேப்பந்தட்டை (தெற்கு) மற்றும் வெண்பாவூர் ஆகிய கிராமங்களிலும், பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் மற்றும் பெரம்பலூர் குறுவட்ட பகுதிகளுக்கு வேலூர், எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர் மற்றும் செங்குணம் ஆகிய கிராமங்களிலும், குன்னம் வட்டத்தில் வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட அகரம் சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி மற்றும் நன்னை (கிழக்கு) ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் வட்டத்தில் செட்டிக்குளம் மற்றும் கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிகளுக்கு உட்பட்ட தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு), பாடாலூர் (கிழக்கு) மற்றும் கொட்டரை ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீர்வாயத்தில் 138 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் வட்டத்தில் நடைபெற்ற தீர்வாயத்தில் 129 மனுக்களும், குன்னம் வட்டத்தில் நடைபெற்ற தீர்வாயத்தில் 45 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் நடைபெற்ற தீர்வாயத்தில் 72 மனுக்களும் என மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டத்தில் 51 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 48 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 32 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 48 மனுக்களும் என மொத்தம் 179 மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் வட்டத்தில் 75 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 90 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 12 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 24 மனுக்களும் என மொத்தம் 201 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
பெரம்பலூர் வட்டத்தில் 03 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 1 மனுவும் என மொத்தம் 04 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வருவாய் தீர்வாயத்தில் துணை ஆட்சியர் திருமதி பிரியதர்ஷினி (பயிற்சி), வேளாண்மை இணை இயக்குநர் திரு. சங்கர்.எஸ். நாராயணன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.சிவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு. சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மரியதாஸ், வேப்பந்தட்டை வட்டாட்சியர் திரு.துரைராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர்கள், அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செ.மருதாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.