கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என பிசியாக இயங்கியவர். 2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றிபெற்றார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்த ஆஷா அஜித், பின்னர் விடுமுறையில் இருந்தார். இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்துள்ளார்.
 
ஆஷா அஜித்தின் கணவர் விஷ்ணு சந்திரன், இவர் நாகர்கோவில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்தார். தற்போது இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆஷா அஜித்தின் தந்தை அஜித் குமார், கேரள மாநில தகவல் மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநகராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் 36 வது புதிய ஆட்சியராக திருமதி ஆஷா அஜித் பதவி ஏற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here