மத்திய சென்னை மாவட்ட பதிவாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
பத்திரப்பதிவு வில்லங்க சான்றிதழில் மாற்றம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து, திருவள்ளூர் மாவட்டம் கள்ளிக்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்புள்ள நிலத்தை சிலர் விற்பனை செய்து விட்டனர்.
இதில் ஆள்மாறாட்டமும் நடந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு, இந்த நில விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில், நிலஅபகரிப்பு புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மேரிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலியான ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்ட லோகநாதன் (வயது 60), ஏ.கே.கிருஷ்ணன் (61), வெங்கடேசன் (45) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.